தயவுக் குறள்
சுவாமி சரவணானந்தா.
உரை விளக்கம்.
பத்தொன்பதாம் அதிகாரம்
அழுகை.
|
1
|
தயவுடையார் பூமேல் தவமுயன்று சூழ்நர்
துயர்துடைத் தீவார் சுகம்.
|
181
|
குறள் விளக்கம்.
மனித வாழ்வில் இன்பமும் துன்பமும் வருவது சகசம். இன்பத்தில் நகை செய்து அகமகிழ்ந்திருப்பதும், துன்பத்தில் அழுது இடுங்கிப் போவதும் இயற்கையே.
ஆதலின், முன் அதிகாரத்தில் நகை மெய்ப்பாட்டைப் பற்றி விளக்கி விட்டு, அதற்கு எதிரான அழுகை மெய்ப்பாட்டின் விளக்கம் இங்கு தொடரப் பெற்றுள்ளதாம்.
அழுகை உண்டாவதற்கு, அகத்தும் புறத்தும் உண்டாம் துயர்தரு துன்பங்கள் காரணமாம். தயவுடையவர்கள், இவ்வுலகில் மிக நன்முயற்சி செய்து துன்புறுகின்றவர்களை அடுத்து அவர்களுடைய துயர் தீர்க்கும் உபாயம் செய்து அவர்களுக்கு நலம் அருள்வார்கள்.
‘பூமேல்”…..என்றதின் அக விளக்கம் : கடவுள் தயவு சோதியாக நம் உளக் கமலப் பூமீது எழுந்தருளி இருப்பதை அறிந்து, நன்முயற்சியினால் அடைந்து சூழுயிர்கட்கு சுகந்தரலே நம் கடமையாம் என்பதாம்.
தவ = மிக.
Write a comment