Swami Saravanaananda - சுவாமி சரவணானந்தா
பாடல் 51 உரையுடன்

தயா விளக்க மாலை
சுவாமி சரவணானந்தா
பாடல் எண்.51.
மதிப்பது நுமது திருவடி யல்லால்
மற்றது வள்ளலே யில்லேன்
துதிப்பது நுமது திருச்செய லொன்றே
சுகந்தருந் தயவிலே யுலகம்
கொதிப்பறக் குளிர்ந்து கொலைபுலை தவிர்ந்து
குருதயா வுண்மையி லோங்க
விதிப்பது எனது விருப்பம தாகும்
மெய்யுறக் கொண்டருள் புரியே. பாடல்.51.
உரை.
வள்ளலே ! உனது திருவடி அல்லாது வேறு ஒன்றை மதியேன். உமது திருச்செயலாம் தயவின் காரியப் பாட்டையே பாடித் துதித்திட விழைகின்றேன். இதைக் காணும் உலகர் - தயாவுள்ளத்தவராய், கொலை புலையற்ற குரு தயவு நெறியிலே தழைத்து ஓங்கச் செய்திடுவாய். இதுவே அடியேன் விருப்பம் எல்லாம்.
Content Ref. Dhaya vilakka maalai.