DAEIOU - தயவு
25.1.2012 முதல் 29.1.2012 வரை சென்னையில் 4வது ஆண்டு ஹிந்து ஸ்பிரிச்சுவல் அண்ட் சர்வீஸ் ஃபேர் (HINDU SPIRITUAL AND SERVICE FAIR) நடைபெறல்.

25.1.2012 முதல் 29.1.2012 வரை சென்னையில் 4வது ஆண்டு ஹிந்து ஸ்பிரிச்சுவல் அண்ட் சர்வீஸ் ஃபேர் (HINDU SPIRITUAL AND SERVICE FAIR) நடைபெறல்.

=0=0=0=0=

ஒவ்வொரு வருடமும் சென்னையில் ஹிந்து ஸ்பிரிச்சுவல் அண்ட் சர்வீஸ் ஃபேர் Hindu Spiritual and Service Fair நடத்தப்பட்டு வருகின்றது. அங்கு, ஆன்மீகம் சார்ந்த அமைப்புக்கள், தங்கள் அமைப்புக்கள் பற்றிய புத்தகங்கள், ஆடியோ சி.டி., வீடியோ சி.டி. முதலானவற்றை பொது மக்களுக்கு விற்பனை செய்வதற்கு ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன. முன்கூட்டியே விண்ணப்பிப்பவர்களுக்கு, இவ்விதம் ஸ்டால்கள் ஒதுக்கீடு செய்கின்றனர்.

2011 ஆம் ஆண்டில், 25.1.2011 முதல் 30.1.2011 வரையிலும், சென்னையில் இந்த அமைப்பின் 3வது விழா நடைபெற்றது. மதுரையில் இயங்கி வரும் வள்ளலார் சன்மார்க்க பெளண்டேஷன் மற்றும் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் வெளியிட்ட சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள் அடங்கிய புத்தகங்கள் விற்பனை செய்வதற்கு, தயவு நூல் வெளியீட்டு அறக்கட்டளை ஆகிய இரு அமைப்புக்களும், திரு அருட்பா மற்றும் சுத்த சன்மார்க்கம் சார்ந்த புத்தகங்களை அங்கு ஒதுக்கப்பட்ட ஸ்டால்கள் மூலம் விற்பனை செய்தனர்.

இந்த ஆண்டில் 25.1.2012 முதல் 29.1.2012 வரையிலும், இந்த சர்வீஸ் ஃபேர் 4வது ஆண்டாக, சென்னையில் நடத்துவதற்கு, விழா ஏற்பாட்டாளர்கள் முயற்சி எடுத்து வருகின்றனர். எந்த இடத்தில் இது நடைபெறும் என்ற விபரம், அந்த அமைப்பிலிருந்து தகவல் வரப்பெற்றபின், இந்த இணைய தளத்தில் வெளியிடப்படும்.

வள்ளல் பெருமானின் திரு அருட்பா, ஆடியோ சி.டி, வீடியோ சி.டி, மற்றும் சுத்த சன்மார்க்கம் சார்ந்த புத்தகங்களை பொது மக்கள் அனைவருக்கும் விற்பனை செய்து பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகளை, பொது மக்கள் நன்கு அறியச் செய்ய வேண்டும் என்ற நோக்கில், தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலும் உள்ள சன்மார்க்க சங்கங்கள் தமது அன்பர்களை (தலா 2 பேர் வீதம்) இவ்விழாவில் பங்கேற்கும்படி செய்ய, அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.