DAEIOU - தயவு
22.10.2011 திண்டுக்கல் Dt சின்னாளப்பட்டி கீழக்கோட்டை சன்மார்க்க சங்கம் வள்ளலார் 189ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் விழா-பள்ளிக் குழந்தைகள் வள்ளலார்களாக வந்த காட்சி.

22.10.2011 திண்டுக்கல் Dt சின்னாளப்பட்டி கீழக்கோட்டை சன்மார்க்க சங்கம் வள்ளலார் 189ஆம் ஆண்டு வருவிக்கவுற்ற நாள் குழந்தைகள் வள்ளலார் எழிற்கோலம் பூண்டு வந்த காட்சி.

==0=0=0=0=

கடந்த 22.10.2011 (சனி) அன்று திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் கீழக்கோட்டையில் அமைந்துள்ள திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சன்மார்க்க சங்கத்தில் 189ஆம் வருவிக்க உற்ற நாள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று காலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளிலும் இருந்து மாணவ மாணவியர் தமது ஆசிரியர்களுடன் வருகை தந்து திரு அருட்பா பாராயணப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சிக்காக, அம்பாத்துரையிலிருந்து வருகை புரிந்த திரிவேணி மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளிக் குழந்தைகள் 23 பேர், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் வெள்ளாடைக் கோலம் தரித்து வந்திருந்தனர். அக்காட்சி, சன்மார்க்க அன்பர்களையும், பார்வையாளர்களையும் மிகவும் கவர்ந்தது.

அவர்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாக (கோரஸாக) திரு அருட்பா பாடல்களைப் பாட வைத்து, இந்நிகழ்ச்சிக்கு

மென்மேலும் பெருமை சேர்த்தார்கள் அந்தப் பள்ளித் தாளாளர் திருமதி துளசி பண்டரிநாத் மற்றும் அப்பள்ளியின்

ஆசிரியைகள். சன்மார்க்க ஆன்றோர் பெருமக்களின் பாராட்டுதலை ஒட்டு மொத்தமாக அந்தப் பள்ளி மழலையர்கள்

பெற்றுச் சென்றனர்.

041

041

047.JPG

047.JPG

128

128

015.JPG

015.JPG

115

115

109.JPG

109.JPG

110.JPG

110.JPG

046.JPG

046.JPG

223

223

154

154

155

155

202

202