DAEIOU - தயவு
2.10.2011 - மதுரை ஜோதி சுப்பிரமணியம் அவர்களின் 2வது ஆண்டு குருபூஜை விழா.

மதுரை திரு ஜோதி சுப்பிரமணியம் அவர்களின் 2வது ஆண்டு குருபூஜை விழா.

-00-0-0-0-00-

மதுரையில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை வேரூன்றச் செய்தவர் திரு ஜோதி சுப்பிரமணியம் அவர்கள். கடல் கடந்தும் சென்று மலேசியா போன்ற நாடுகளிலும், அவர், சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்பியவர். அன்னாரின் 2வது குரு பூ ஜை, வரும் 2.10.2011 (ஞாயிறு) அன்று, காலை 9.00 மணி அளவில் துவங்கி, மதியம் 2.00 மணி வரை நடைபெற உள்ளது. மூத்த சன்மார்க்க சான்றோர்கள் அனைவரும் இந்த விழாவில் பங்கு பெற்று சுத்த சன்மார்க்க உரை நிகழ்த்த உள்ளனர். எனவே, இவ்விழாவில் பங்கு பெற்று அருள் நலம் பெறும்படி, விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புக்கு - திரு சங்கரானந்தம், மதுரை. 90036 60935.