ப்ரெய்லி முறையில் திரு அருட்பா ஆறு திருமுறைகளும் படிப்பதற்குக் கிடைக்கின்றன.
=0=0=0=0=0=0
திரு அருட்பாவினை மாற்றுத் திறனாளிகளான கண் பார்வையற்றோர் படிப்பதற்கு இதுவரை வசதி ஏதும் இல்லாதிருந்தது. சென்னையைச் சேர்ந்த சன்மார்க்க அன்பர் திரு கண்ணப்பன் கண் பார்வையற்றவர்.
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் கடைக்கண் கடாட்சம் கிடைக்கப் பெற்றதால், திரு அருட்பாவினை பிறர் சொல்லக் கேட்டுக் கற்கும் வாய்ப்பு இவர்களுக்கு வாய்த்தது. தற்போது, திரு அருட்பா ப்ரெய்லி முறையில் மாற்றப்பட்டு, ஆறு திருமுறைகளும் கண் பார்வையற்றோரும் படித்துப் பயன்பெறும் வண்ணம் கிடைக்கின்றது என்ற தகவலை திரு கண்ணப்பன் தெரிவித்தார்.
Write a comment