திண்டுக்கல் மாவட்டப் பள்ளிகள்/கல்லூரிகளில் திரு அருட்பா பாடல்கள்/கட்டுரை/பேச்சுப் போட்டிகள்.
=0=0=0=0=0=0=0=
வருடந்தோறும், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் அருளிய திரு அருட்பா பாடல்கள் கருத்துக்களை மாணவ மாணவியரிடையே பரப்பும் நோக்கில் திரு அருட்பா பாடல்கள், கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இப்போட்டிகள், திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் உள்ள நேருஜி நினைவு நகராட்சி மேல் நிலைப்பள்ளியில் நடைபெறும். அந்த வகையில், 2010 ஆம் ஆண்டில், 10வது ஆண்டாக இந்தப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இந்தப் போட்டிகளில் கிறிஸ்துவ மாணவ மாணவியர்களும் மிகுந்த ஆர்வமுடன் கலந்து கொண்டு, பரிசுகளைத் தட்டிச் செல்கின்றனர். மத மாச்சரியங்களைத் தாண்டி, இந்தப் போட்டிகள், மாணவ, மாணவியரிடையே ஒரு ஆரோக்கியமான போட்டியினை வளர்த்து வருகின்றது.
திண்டுக்கல் தொழிலதிபர்கள் திருவாளர்கள் சிவராம்-மோகன்ராம் மாவட்ட சன்மார்க்க சங்கத் தலைவர் திரு S.S.கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது முயற்சியால், இந்தப் போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் அந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியருக்கு, வரும் 28.11.2010 (ஞாயிறு) அன்று இறுதிப் போட்டியினை நடத்தி பரிசுகள் வழங்கப்பட உள்ளன.