சென்னையில் திரு அருட்பா இசை மற்றும் நாட்டிய விழா.
நாள் 22.12.2010 முதல் 24.12.2010 வரை (3 நாட்கள்) மாலை நிகழ்ச்சி.
இடம்: தி.நகர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
திருமண மண்டபம், நிர்.100, ஹபிபுல்லா சாலை, சென்னை 17.
=0=0=0=0=
வரும் 22.12.2010 முதல் 24.12.2010 வரை 3 நாட்கள், தினந்தோறும் மாலை 4.00 மணி அளவில்சென்னையில் திரு அருட்பா இசை மற்றும் நாட்டிய விழா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
கடந்த 5 ஆண்டுகளாக இவ் விழாவினை நடத்தும் திருபுவனம் திரு ஆத்மநாதனின் முயற்சியால், பல்வேறு இசைக் கலைஞர்கள், திரு அருட்பாவினை இசையுடன் பாடுவதற்கென்றே இந் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சன்மார்க்க அன்பர்கள் மற்றும் ஆன்மநேய பொது மக்கள் அனைவரும், இந் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொண்டு அருள் இன்பம் பெறும்படி திரு ஆத்மநாதன் அவர்கள், அனைவரையும் அழைக்கின்றார்.
22.12.10 to 24.12.10-Thirubuvanam Athmanathan Katchery at Chennai