திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 188வது வருவிக்கவுற்ற நாள் விழா.
இடம் - மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி
நாள் 10.10.2010 நேரம் காலை 10.30 மணி.
=0=0=0=0=
10.10.2010 அன்று, திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 188வது வருவிக்க உற்ற நாள் விழா, மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமத்தில் காலை சுமார் 10.30 மணி அளவில் கொண்டாடப்பட்டது. திரு அருட்பா பாடல்கள் பாடப்பட்டன. இதற்கான ஏற்பாட்டினை, மானாமதுரை சன்மார்க்க அன்பர் திரு ஜெயராம், அவரது மனைவி திருமதி வள்ளி மற்றும் மூங்கில் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த திருமதி திருவம்மா குடும்பத்தினர் மிகச் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர். 25 நபர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தனர். அவர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது
Write a comment