வடலூரில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள்.
=0=0=0=0=0=0=0=
வடலூரில் சமீப காலமாக, பல மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த 2.10.2010 அன்று மாலை, சத்திய ஞான சபையின் முன் மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் மாண்புமிகு மூன்று அமைச்சர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அடுத்ததாக, கேட்பாரற்றுக் கிடக்கும் சத்திய ஞான சபையின் முன்புறம் இனிமேல் மெயின் கேட் (வடக்குப் புறம்) பூஜை முடிந்த பின் பூட்டி வைக்கப்பட உள்ளது.வெளி நபர்கள் யாரும் அங்கு, தங்க முடியாத அளவிற்கு, இந்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.
அதுபோல், தற்போது இயங்கி வரும் தருமச்சாலை, தெய்வ நிலைய அலுவலகம் வரை நீடிக்கப்பட்டு வருகின்றது.
தியான மண்டபமும் கட்டும் திட்டம் உள்ளதாக, இவ்விழாவின்போது பேசப்பட்டுள்ளது.
அடுத்ததாக, வள்ளல் பெருமானுக்காக www.vallalardheivanilayam.org என்ற பெயரில் ஒரு இணைய தளத்தினை கும்பகோணம் சன்மார்க்க அன்பர் திரு நடராஜன் என்பவர் துவக்கி உள்ளதாகத் தகவல் உள்ளது.
நானே சன்மார்க்கம் நடத்துகின்றேன் என திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் சொல்லிச் சென்றதை தற்போது நிறைவேற்றி வருகின்றார் என்பதற்கு இவையெல்லாம் சான்றுகள்.
தயா