DAEIOU - தயவு
3.10.2010-மானாமதுரை வட்டம் மூங்கில் ஊரணியில் அக்டோபர் மாதப் பூச விழா.

மானாமதுரை வட்டம், மூங்கில் ஊரணியில் 2010 அக்டோபர் மாதப் பூச விழா.

=0=0=0=0=0=

மூங்கில் ஊரணி கிராமத்தில் 3.10.2010 அன்று, 2010 அக்டோபர் மாதப் பூச விழா மிகச் சிறப்புடன் கொண்டாடப்பட்டது. நிறுவனர் திரு ஜெயராம் அவரது மனைவி திரு வள்ளி, அவர்களது மைந்தன் திரு தயாமணி ஆகியோர் திரு அருட்பா பாடல்களைப் பாட, அங்கு வந்திருந்த அனைவரும் அதனைத் தொடர்ந்து பாடினர். சுமார் 13 பெரியோர்களும், 27 சிறார்களும், இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. மூங்கில் ஊரணி கிராமத்தைச் சேர்ந்த திருமதி திருவம்மா மாதப் பூச விழாவிற்கு, மிகவும் உறுதுணையாக இருந்து உதவிகள் புரிந்து அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருளுக்குப் பாத்திரமாயினார்.