வடலூரில் சத்திய ஞான சபையின் முன்புறம் கட்டப்பட்டுள்ள மண்டபத் திறப்பு விழா.
நாள் : 2.10.2010 (மாதப் பூச நாள்) சனிக்கிழமை.
=0=0=0=0=0=0
வடலூரில் சத்திய ஞான சபையின் முன்புறமாக கடந்த 2 வருடங்களாகக் கட்டப்பட்டு வந்த முன் மண்டபம் கட்ந்த 2.10.2010 ந் தேதி சனிக்கிழமை மாதப் பூச நாளன்று திறக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசின் சார்பின் மாண்புமிகு 3 அமைச்சர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர்.
1. மாண்புமிகு அமைச்சர் திரு பெரிய கருப்பன் அவர்கள்.
2. மாண்புமிகு அமைச்சர் திரு M.R.K. பன்னீர்செல்வம் அவர்கள்.
3. மாண்புமிகு அமைச்சர் பேராசிரியர் திரு அன்பழகன் அவர்கள்.
2.10.2010 அன்று மாதப் பூச நாள் விழாவில், மாலை 5.30 மணி அளவில் இத் திறப்பு விழா நடைபெற்றது. பெருந்திரளான சன்மார்க்க அன்பர்களும் பொது மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவினைச் சிறப்பித்தனர்.
இதைத் தொடர்ந்து, தருமச்சாலை முன்புறம் உள்ள மேடையின் முன்புறமும் நிரந்தரமான மண்டபம் கட்டுவதற்கான திட்டம் உள்ளதாக அவ்விழாவில் தெரிவிக்கப்பட்டது.