DAEIOU - தயவு
5.9.2010-மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமத்தில் மாதாந்திர பூச நாள் விழா.

மானாமதுரை தாலுகா மூங்கில் ஊரணி கிராமத்தில் மாதாந்திர பூச நாள் விழா நடைபெற்ற விபரம்.

நாள் 5.9.2010 (ஞாயிறு)

நேரம் காலை 9.30 மணி.

=0=0=0=0=0=0=

சிவகங்கை தாலுகா மானாமதுரை தாலுகாவில் மூங்கில் ஊரணி என்ற கிராமத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக சத்திய ஞான சபையினை, மானாமதுரையைச் சேர்ந்த திரு ஜெயராம் அவரது மனைவி திருமதி வள்ளி ஆகியோர் கட்டி அருட்பெருஞ் ஜோதி வழிபாடு செய்தனர்.

ஊர் மக்கள் அனைவருக்கும் இது குறித்து அவர்கள் விளக்கம் செய்தும் வருகின்றனர். மாதப் பூச நாளுக்கான வழிபாடுகளையும் அவர்கள் மாதந்தோறும் செய்து அன்ன வினியோகம் செய்கின்றனர்.

அந்த வகையில் 2010 செப்டம்பர் மாதத்திற்கான மாத பூச நாள் விழாவினை கடந்த 5.9.2010 (ஞாயிற்றுக் கிழமை) அன்று அவர்கள் மூங்கில் ஊரணி சத்திய ஞான சபையில் நடத்தினர்.

சுமார் 60 நபர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

திரு அருட்பா பாடல்கள் பாடப்பட்டன. பகல் உணவு 50 ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டது.