5.9.2010-திண்டுக்கல் மலையடிவாரம், அருட்பெருஞ்ஜோதி சன்மார்க்க சங்கத்தில் மாதப் பூச விழா 104வது நிகழ்வு.
திண்டுக்கல் மலையடிவாரத்தில் இயங்கி வரும் சன்மார்க்க சங்கத்தில் கடந்த ஞாயிறு 5.9.2010 அன்று. மாலை 6.30 மணி அளவில், 104வது நிகழ்வாக மாதப் பூச விழா கொண்டாடப்பட்டது.
தயவுத் திரு வி.புயல்ராசு, போடிநாயக்கனூர் தலைமையாசிரியர் தலைமையில், சிதம்பரம் வள்ளலார் மன்றத் தலைவர் தயவுத் திரு வை. நமசிவாயம் அவர்கள் வள்ளலார் வாழ்கின்றார் என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார்.
இறுதியில் செயற்குழு உறுப்பினர் திரு மா.இராமலிங்கம் நன்றியுரை கூறினார். சுமார் 150 நபர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Write a comment