சுவாமி சரவணானந்தா அவர்களின் நூற்றாண்டு விழா.
=0=0=0=0=0=0=
வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறியில் நின்று பல நூலகளையும், தயவுப் பெரு நெறி, தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுக் குறள் மற்றும் 50க்கும் மேற்பட்ட சுத்த சன்மார்க்க விளக்க நூல்களை வெளியிட்டவர் திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள். அவர்கள் பிறந்த ஆண்டு 1910 ஆகும். 100 ஆண்டுகள் நிறைவுறும் நிலையில், சுவாமிகளுக்கு, கீழ்க்கண்ட இடங்களில், நூற்றாண்டு விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை, சன்மார்க்க அன்பர்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
.gif)
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
1) மதுரை - நாள் 25.7.2010 (ஞாயிறு) காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை. ஸ்ரீ மந் நடன கோபால நாயகி மந்திர் (தெப்பக்குளம் கரை). மூத்த சன்மார்க்க அன்பர்கள் பங்கு கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
அன்று மாலை 6.45 மணி அளவில், அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் வளாகத்தினுள் வடக்காடி வீதியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கழகத்தில் சுவாமி சரவணானந்தா அவர்களின் சன்மார்க்கத் தொண்டு குறித்து அன்பர்கள் பேச உள்ளனர்.
இதற்கான அழைப்பிதழ் ஏற்கனவே இந்த இணணய தளத்தில் வெளியிடப்பட்டது.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
2) தூத்துக்குடி - சன்மார்க்க அன்பர்கள் திருநெல்வேலி பாபநாசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ சிருங்கேரி மடத்தில் 30.7.2010 (வெள்ளி) மாலை 6.00 மணி முதல் 2.8.2010 (திங்கள்) வரையில் விழா எடுக்கின்றனர். மூத்த சன்மர்க்க அன்பர்கள் பலரும் இதில் கலந்து, சிறப்புரை ஆற்ற உள்ளனர். இதற்கான அழைப்பிதழ் இந்த இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டது.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
3) திண்டுக்கல் - 10.10.2010 அன்று திண்டுக்கல் சன்மார்க்க அன்பர்கள், திண்டுக்கல் மலையடி வாரத்தில், விழா எடுக்கின்றனர்.இதற்கான விழா மலர் தயாரிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வருகின்றது.
இது குறித்த அழைப்பிதழ் வரப்பெற்றதும். இந்த இணைய தளத்தில் அது குறித்த விரிவான நிகழ்ச்சி நிரல் வெளியிடப்படும்.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=
சுத்த சன்மார்க்க நெறியில் பல காலம் நின்று, ஆன்ம நிலையில் சுவாமி அவர்கள் வெளியிட்ட பல நூல்கள், அன்பர்களை, சுத்த சன்மார்க்கப் பாதையில் கொண்டு வந்து சேர்த்தன. எனவே, மேற்காணும் நாட்களில் நடைபெறவுள்ள விழாக்களில் கலந்து கொண்டு, சுத்த சன்மார்க்க விளக்கம் பெற வேண்டும் என மேற்காணும் இடங்களில் விழா நடத்தும் சன்மார்க்க அன்பர்கள் வேண்டுகின்றனர்.
=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0=0= =0=0=0=0=0=0=0=0