DAEIOU - தயவு
சன்மார்க்கப் பணிகளுக்கு கண் பார்வை இல்லாதது ஒரு தடையல்ல.

மதுரை மாவட்டம்-மேலூர் வட்டம்-கருங்காலக்குடி கிராமம். சன்மார்க்கப் பணி

பார்க்கும் அன்பர் திரு கணபதி.

=0=0=0=0=0=0=

சிவகங்கை மாவட்டத்தில் திருப்பாச்சேத்தி கிராமத்தில் அமைந்துள்ள சன்மார்க்க சங்கத்தின்

சத்திய தருமச்சாலை துவக்க விழா 11.7.2010 (ஞாயிறு) அன்று நடைபெற்றது. அந்த விழாவிற்கு

வந்திருந்த திரு கணபதி என்பவர் கண்பார்வை இல்லாதவர்.

இருப்பினும் திரு அருட்பிரகாச வள்ளற் ;பெருமானின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளில்

தீவிர ஈடுபாடு கொண்டு, மேலூர் வட்டம் கருங்காலக்குடிக்கு அருகாமையில் உள்ள

திருச்சுனை என்ற இடத்தில் சன்மார்க்க சங்கம் துவக்கி, ஏழை எளியோருக்கு அன்னதானப்

பணியில் கடந்த 15 ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளார்.

அவர், தமது உரையில், தமது பார்வை இன்மை, சன்மார்க்கப் பணிக்கு ஒரு பாதிப்பாக இல்லை

என்றும், திருவருட்பிரகாச வள்ளற் பெருமான், தமது வாழ்வில், தாம் விரும்பியதைக்

கொடுத்துத் தம்மைக் காத்து வருவதாகவும், தமது சன்மார்க்கப் பணிக்கு

எவ்வித இடையூறுமின்றி வேண்டுவன வேண்டும்போது கொடுத்துக் காக்கின்றார் என்றும்

தெரிவித்தார். வந்திருந்த அனைவரும் அவரது செயல்பாட்டினைக் கண்டு வியந்தனர்.

திருப்பாச்சேத்தி சன்மார்க்க சங்கத் தலைவர் திரு முத்துக்காமாட்சி ஐயா அவர்கள், திரு கணபதியின் தொண்டினைப்

பாராட்டி அவருக்குப் பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்.

காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணே என்று வள்ளற் பெருமான் திருவருட்பாவில் பாடியது,

இவர் விஷயத்தில் மெய்யானது.