DAEIOU - தயவு
28.4.2010 (புதன்) கோயம்புத்தூரில் சித்ரா பெளர்ணமி நாளன்று திரு அருட்பா இசைக் கச்சேரி சிறப்பாக நடைபெற்றது..

சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட்,

வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கம், சென்னை,

வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன்,

கொங்கு நாடு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், கோயம்புத்தூர்,

அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் அறக் கட்டளை, திருவண்ணாமலை

இணைந்து நடத்திய திரு அருட்பா இசை விழா.

நாள் 28.4.2010 (புதன் கிழமை).

இடம்: ஸ்ரீ ராமர் கோவில். ராம் நகர், கோயம்புத்தூர்.

நேரம் - காலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை.

இந்த திரு அருட்பா இசை விழா சிறப்பாக அமையக் காரணமானவர்கள்.

-0-0-0-0-0-0-00-

கோயம்புத்தூர் மாவட்டம், வடசித்தூரில் கடந்த 2.4.2010 அன்று சிங்கப்பூர் சன்மார்க்க அன்பர் திரு சிவக்குமார் அவர்கள்

கட்டி வரும் சத்திய தருமச்சாலை மற்றும் சாதுக்கள் மையத் திறப்பு விழா நடைபெற்றது. அதனை ஒட்டி அங்கு வருகை புரிந்த

திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன் அவர்கள், திரு அருட்பா இசைக் கலைஞர்களுடன் சித்ரா பெளர்ணமி நாளில் கோயம்புத்தூரில்

இசை விழா நடத்த வேண்டும் என்ற அவாவினை வெளியிட்டார்.

அதனை ஏற்றுக் கொண்ட சிங்கப்பூர் சிவகுமார் மற்றும் கோயம்புத்தூர் ஸ்ரீ சிவகிரி பிளைவுட்ஸ் உரிமையாளர்,

திரு பிரபு குமார் ஆகியோர் இதற்கான ஏற்பாடுகளை, செய்தனர்.

முக்கியமான ஒரு இடத்தில் இந்த இசை விழா நடந்தால், திரு அருட்பாவின் சிறப்பினையும்,

திரு அருட்பிரகாச வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும் அனைவரும்

அறிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என்ற நோக்கில், இதனை

கோயம்புத்தூர் காந்திபுரம் பேருந்து நிலையம்அருகில் அமைந்த ராம் நகர் ஸ்ரீ ராமர் கோவிலில் நடத்துவதற்கு

உரிய அன்பர்களை நாடி, இதனை நடத்தினர்.

ஸ்ரீ ராமர் கோவில், ராம் நகர், கோயம்புத்தூர். திரு பிரபு குமார் (நடுவில்) மற்றும் அவரது நண்பர்கள்.

தமிழ் நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து பல சன்மார்க்க அன்பர்களையும், சங்க நிர்வாகிகளையும்,

கோயம்புத்தூர் அதனை அடுத்து உள்ள பல்வேறு இடங்களிலிலுமிருந்து பொது மக்கள், மற்றும் சுத்த சன்மார்க்க

அன்பர்களை எல்லாம் இந்த திரு அருட்பா இசை விழா ஈர்த்தது. காலை 6.00 மணிக்கு ஆரம்பித்த

யோகம், தியானப் பயிற்சி, திரு அருட்பா பாராயணம் மற்றும் அதனைத் தொடர்ந்து காலை 9.00 மணி முதல்

ஆரம்பித்த திரு அருட்பா இசை விழா, சொற்பொழிவு அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

இரவு 11.00 மணி வரை இந்த இசைக் கச்சேரி நடந்தது.

திருபுவனம் திரு ஜி. ஆத்மநாதன்

திரு சிவகுமார், சிங்கப்பூர்,