மேட்டுக்குப்பம் திரு துரை சீனுவாசன் ஐயா அவர்களின் சத் விசார உரை.
காஞ்சீபுரம் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையங்கள் கடந்த 17.4.2010 அன்று (சனிக்கிழமை) தைப்பூசத் திருநாளைக் கொண்டாடியது. முதல் நாளான 16.4.2010 அன்றே
சிறப்புப் பேச்சாளர்கள் ஒரு சிலரும், மழையூர் அருட்பா பாடகர் திரு சதாசிவம் ஆகியோரும் காஞ்சீபுரத்தில் வந்து தங்கினர். அவர்களில் ஒருவர் மேட்டுக்குப்பம் திரு துரை சீனுவாசன் ஆவார்.
இரவு சுமார் 10.30 மணி இருக்கும். அவர் தங்கியிருந்த இடத்துக்கு சிங்கப்பெருமாள் கிராமத்தைச் சேர்ந்த 4 அன்பர்கள் வந்தனர். அவர்கள் திரு துரை சீனுவாசன் ஐயா அவர்களைப்
பார்த்து ஐயா தாங்கள் வந்திருக்கின்றீர்கள். இரவு முழுவதும் சுத்த சன்மார்க்க சத்விசாரம் கண்டிப்பாக நடைபெறும். அதிப் பங்கேற்று, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக்
கருத்துக்களை நன்கு தெரிந்து தெளிவு கொள்வதற்காக வந்துள்ளோம் ஐயா என்றனர்.
ஆயிற்று...திரு துரை சீனுவாசன் அவர்கள் 10.40 மணிக்கு இரவில் துவங்கிய சத்விசாரம், அதிகாலை 1.40 மணி (17.4.2010) வரை நடந்தது. அதன் பின்னர் ஐயா எங்களுக்கு இந்த விழாவின்
பத்திரிகை 16.4.2010 மாலை 3.00 மணி அளவில் தான் கிடைத்தது. தாங்கள் வந்திருந்த தகவல் கேட்டு ஓடோடி வந்தோம். நாளைய (17.4.2010) விசேஷத்திற்கு நாங்கள் யாரும் இருக்க
முடியாது. ஏனெனில் நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் பணி புரிகின்றோம். எனவே, இந்த இரவில் தங்களிடம் கேட்டு தெளிவு பெற்ற சத்விசாரம் எங்களுக்கு தெளிவான
கருத்துக்களை வழங்கியுள்ளது என்று சொல்லிவிட்டு இரவோடிரவாக அனைவரும் கிளம்பி விட்டனர்.
திரு துரை சீனுவாசன் அவர்களின் மூதாதையர்கள், மேட்டுக்குப்பத்தில் சித்தி வளாகத்திற்கு இடம் கொடுத்தவர் பலரில் ஒருவர் என்பதும். மாதந்தோறும் நடைபெறும் பூச நாள்
விழாக்களில், இரவில் மேட்டுக்குப்பம் வந்து தங்கும் அன்பர்கள், திருவாரூர் சன்மார்க்கக் கட்டிடத்தில், திரு துரை சீனுவாசன் ஐயா அவர்களால் நடத்தப்படும் சத் விசார நிகழ்ச்சிகளில்
கலந்து கொண்டு திரு அருட்பாத் தேனையும், வள்ளற் பெருமானாரின் கருத்துக்களையும் கேட்டு இன்புறுவது வழக்கம் என்பது அப்போது தெரிய வந்தது.
இடது புறமிருந்து 3வதாக நிற்பவர்தான் திரு துரை சீனுவாசன், மேட்டுக்குப்பம். வள்ளற்பெருமானின் படத்தினடியில் உள்ளார்.
சிங்கப்பெருமாள் கோவில் அன்பர்கள் மற்றும் காஞ்சீபுரம் தெய்வ நிலையங்களின் செயலாளர் திரு வெங்கடேசனுடன் உள்ளனர்.
முன்புறம் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருக்கும் திரு துரை சீனுவாசன் ஐயா அவர்கள், மேட்டுக்குப்பம்.
விழாத் தலைவர் திரு மு.பாலு ஐயா, சன்மார்க்க சங்கம், ஆழ்வார்பேட்டை அவர்களின் பேச்சைக் கேட்கும் திரு துரை சீனுவாசன்.(வலது)
விழா நிகழ்ச்சியில் சுத்த சன்மார்க்க விளக்கம் அளிக்கும் திரு துரை சீனுவாசன், மேட்டுக்குப்பம் (வலது ஓரம்). விழாத் தலைவர் திரு மு.பாலு அய்யா
அவர்கள் ஆழ்வார் திருநகர், சென்னை (நடுவில்) திரு பாலகிருஷ்ணன் அவர்கள், படப்பை. சென்னை. (இடது ஓரம்)
திரு அருட்பா இசைக் கச்சேரி-மழையூர் திரு சதாசிவம் குரூப் அன்பர்கள் பாடுகின்றனர். இதனைக் கேட்பதற்கென்றே பல மாவட்டங்களிலும்
இருந்து, காஞ்சீபுரத்துக்கு வந்தவர்கள் அதிகம்.