கோயம்புத்தூரில் சித்ரா பெளர்ணமி நாள் 28.4.2010 (புதன்கிழமை)
திரு அருட்பா இசைக் கச்சேரி.
திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்கள், கடந்த 4 ஆண்டுகளாக, சென்னையில் திரு அருட்பா இசை விழாவினை டி.நகரில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் அரங்கில் நடத்தி வருகின்றார்.
சென்னையில் 2009 டிசம்பர் திரு அருட்பா இசை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த டாக்டர் சீர்காழி சிவ சிதம்பரம் மற்றும் டாக்டர் சிவகாம சுந்தரி அவர்கள்.
சென்னையில் 2009 டிசம்பரில் நடத்திய திரு அருட்பா இசை விழாவில் திருபுவனம் திரு ஆத்மநாதனும் (first from left) ஏனையோரும்.
அதேபோல் ஒவ்வொரு ஆண்டும், சித்திரா பெளர்ணமி நாளில் ஏதாவதொரு மாவட்டத் தலைநகரில், 10க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைக் கொண்டு வந்து திரு அருட்பா இசைக் கச்சேரி நடத்துவ்தை வழக்கமாகக் கொண்டுள்ளார். கடந்த வருடம் (2009) மதுரையில் இந்த இசை விழா மிகவும் விமரிசையாக, ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில், தெப்பக்குளம் ஏரியாவில், நடத்தப்பட்டது.
2010ஆம் ஆண்டில், சித்திரா பெளர்ணமி நாளான 28.4.2010 அன்று புதன் கிழமை கோயம்புத்தூரில் ஆர்.எஸ்.புரத்தில் அமைந்துள்ள ராமர் கோயில் ஹாலில் இந்த திரு அருட்பா இசை விழாவினை
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனின் சார்பில்,
நடத்தும்படி சிங்கப்பூர் திரு சிவகுமார் கேட்டுக் கொண்ட அங்கு நடத்துவதற்கு, 10க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களுடன் திருபுவனம் திரு ஆத்மநாதன் அவர்கள் வருகை தர உள்ளார்.
எனவே, சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அங்கு வருகை தந்து இந்த இசை விழாவினைச் சிறப்பிப்பதுடன் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் திரு அருட்பா இசையினைக் கேட்டு ஆன்ம லாபம் பெற்று, இன்புறும்படியும் விழாக் குழுவினர் கேட்டுக் கொள்கின்றனர்.
திருபுவனம் திரு ஆத்மநாதன் செல் எண்.93801 25989.