DAEIOU - தயவு
7.3.2010 அன்று சிங்கப்பூரில் சுத்த சன்மார்க்க நெறி நூல் வெளியீட்டு விழா..

சிங்கப்பூரில் சமரச சுத்த சன்மார்க்க நெறி நூல் வெளியீட்டு விழா.-தினமலர் செய்தி.


சிங்கப்பூர் சமரச சுத்த சன்மார்க்க குழுவின் சார்பாக 7.3.2010 அன்று, முஸ்தபா எதிரில் உள்ள

ஆனந்த பவன் உணவகத்தின் மேல் மாடியில் வே.திருவேங்கடம் எழுதிய 'சமரச சுத்த சன்மார்க்க

நெறி' எனும் நூல் மிக சிறப்பாக வெளியிடப்பட்டது. இவ்விழாவினை சன்மார்க்க அன்பர் சிவகுமார்

' அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையும் சிதம்பரம் இராமலிங்க பெருமானாரையும் (வள்ளலார்)

தலைமை ஏற்று சிறப்புற நடத்தித் தருமாறு இறை வணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

செல்வி எ.விஸ்வேஸ்வரி மற்றும் செல்வன் நித்யானந்தன் ஒரு மணி நேரம் அற்புதமாக

திரு அருட்பா பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தனர். திரு வே. திருவேங்கடம்

மிக சிறப்பாக சுத்த சன்மார்க்க நெறி என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். இதனைத்

தொடர்ந்து வே.திருவேங்கடம் சமரச சுத்த சன்மார்க்க நெறி என்ற நூலையும், திரு அருட்பாவில்

மகாதேவ மாலை பாடல்கள் அடங்கிய குறுந்தகடையும் வெளியிட, என். கணேசன்

முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.



நன்றி--தினமலர் நாளிதழ் (வெளிநாட்டுச் செய்திகள்)