DAEIOU - தயவு
வடலூரில் சத்திய ஞான சபையிலிருந்து நேரடியாக சத்திய தருமச்சாலை தெரியும் வண்ணம் ஆக்கிரமிப்பு அகற்றம்.

வடலூரில் சத்திய ஞான சபையிலிருந்து

நேரடியாக சத்திய தருமச்சாலை

தெரியும் வண்ணம்

ஆக்கிரமித்திருந்த கட்டிடங்கள் அகற்றம்.

செல்வி சிவசந்திரா அவர்கள், புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் தனியே சன்மார்க்க சங்கம் நிறுவி,

அதனை நடத்தி வருகின்றார். அவர் 11.3.2010 அன்று தெரிவித்த தகவல்.

இலங்கை சாவகச் சேரியில் சத்திய ஞான கோட்டம் செல்வதற்கு திரு ஜோதிமுருகன் ஐயா சொல்லிய வண்ணம்

பாஸ்போர்ட் எல்லாம் எடுத்து வைத்துள்ளேன் ஐயா.

எப்போது அங்கு செல்லும் வாய்ப்பு உள்ளது எனக் கேட்டார் அவர் கோரிய தகவலை முதலில் விவரமாகத்

தெரிவிக்கப்பட்டது..

அவர் மேலும் சொன்னார்.

நான் கடந்த ஒரு மாதமாக வடலூரில் தான் உள்ளேன். வடலூரில் சத்திய ஞான சபையிலிருந்து பார்த்தால்,

சத்திய தருமச்சாலையே தெரியும் வண்ணம் ... இடையில் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் (புஸ்தகக் கடை

முதலானவை) இடிக்கப்பட்டுள்ளன. என்றார். பெருமானின் கடைக்கண் பார்வையினால், வடலூரில்

பலப் பல அதிசயங்கள் சமீப காலத்தில் நிகழ்ந்து வருகின்றன.அதில் இதுவும் ஒன்று போலும்...நீண்ட நாள்

ஆக்கிரமிப்புக்கள் அகற்றினால், கூட்டம் கூட்டமாக பல்வேறு இடங்களிலும் இருந்து வரும் சன்மார்க்க அன்பர்கள்

நல்ல பயன் உறுவார்கள்.