வள்ளலார் சன்மார்க்க சங்கங்களைக் குறி வைத்து நடக்கும் ஏமாற்று வேலைகள்-(3)
-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0--0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0
2009 அக்டோபர் மாதம் கடைசி வாரம்.
சார் நாங்க……………….தொலைக்காட்சி நிறுவனத்தில இருந்து பேசுறோம்.
உங்க சன்மார்க்க சங்க செயல்பாடுகளை எல்லாம் நாங்க படம் பிடிச்சு, எங்க தொலைக்காட்சியில காண்பிக்க உள்ளோம். எங்க சீப் ஆபீசர்…. ஏற்கனவே சொல்லி நீண்ட நாளாச்சு. எங்களுக்கு பல வேலை இருந்ததுனால,,நாங்க அங்க வர முடியல…இப்பொதான் நேரம் வந்துச்சு,,,அதனால, நாங்க இன்னும் இரண்டு நாள்ல வர்றோம் சார். முக்கியமான சன்மார்க்க உறுப்பினர்களை எல்லாம் வரச் சொல்லி…நாங்க தொலைக்காட்சி நிகழ்ச்சில ஒளிபரப்புற மாதிரி…சொற்பொழிவு முதலானவற்றை ஏற்பாடு செய்யுங்க சார்.
மதுரைல…இருக்கற மற்ற சங்கங்களுக்கும் இது பற்றி சொல்லுங்க சார். அங்கயும் வந்து அவங்க செயல்பாட்டைப் பத்தியும் நாங்க வீடியோவில் ரிக்கார்டு செய்து எங்க தொலைக்காட்சீல போடுறதுக்கு ஏற்பாடு செய்றோம் சார்.
அடுத்து சார்…எங்க தொலைக்காட்சி நிறுவனத்தின் ஒளிபரப்பு, கிட்டத்தட்ட 160 நாடுகள்ல தெரியும் சார். நாங்க ஒரு டீமா வர்றோம் சார்….எங்களுக்கு இந்த மாதிரி நிகழ்ச்சிகளை ரிக்கார்டு செய்ய செலவு தொகை ரூ.6,000 வரை ஆகும். அதையும் யாராவது ஸ்பான்ஸர்ஸ் இருந்தாங்கன்னா….கொடுத்துர்றதுக்கும் ஏற்பாடு செய்யுங்கய்யா…
சங்கம் நடத்துறதே மிகவும் சிரமப்பட்டு நடத்துறோம்ங்க..இதுல…நீங்க வந்து ரிக்கார்டு செய்துட்டுப் போறதுக்கு வேற ரூபா கேட்டா எப்புடீங்க….
நீங்க…அந்த…………….தொலைக்காட்சீல….என்னவா இருக்கீங்க…..
நானா சார்….ப்ரொக்ராம் கோ ஆடினேட்டரா…இருக்கேன். நீங்க ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துல வீடியோ ரிக்கார்டு செய்தாலும் இதேபோல செலவு ஆகும்ல..அதுனால ஏற்பாடு செய்யுங்க சார்.
நாங்க…வீடியோ எடுத்து…எடிட் செய்து…உங்களுக்கு அனுப்புவோம்….அதற்குப் பின் அடுத்த மாத முதல் வாரத்தில அங்க எடுக்குற வீடியோ…ஒளிபரப்பாகும் சார்….
சரி……வள்ளல் பெருமானுடைய சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள்…உலகம் முழுதும் பரப்புறதுக்கு…இன்னக்கித் தேதீல தொலைக்காட்சியில இடம் கெடக்குதே என்ற நோக்கத்தில்…சன்மார்க்க சங்க அன்பர்கள்…தொலைக்காட்சி நிறுவனத்துல இருந்து வந்த அங்கத்தினர்கள் கேட்ட தொகையை ரெடி செய்தார்கள்.
குறிப்பிட்ட தேதியில், ஒரு டாக்ஸியில்…வீடியோ கேமிரா சகிதம் மூவர் வந்தனர்….முதலில், ஒரு வள்ளலார் சங்கத்தில் எடுத்து முடித்து விட்டு. அடுத்த சங்கத்துக்கு வந்து அங்கேயும், மூத்த சன்மார்க்க சங்க அன்பர்கள் சொற்பொழிவு முதலானவற்றையெல்லாம் ரிக்கார்டு செய்து சென்றனர்.
தொகையையும் இரு நிறுவனங்களிடமிருந்தும் கைப்பற்றிக் கொண்டு சென்று விட்டனர்.
அன்பர்களின் ஆவலால், இரண்டு மூன்று முறை..வீடியோ பிடித்துச் சென்ற நபரின் மொபைலை தொடர்பு கொண்டதில், நாங்க எடுத்துக் கொடுத்துட்டோம் சார். எடிட் ஆகீருச்சு சார். கூடிய விரைவில், ஒளிபரப்புவாங்க…சார்…
ஒரே பதில் இரண்டு மூன்று முறை….வந்தது.
ஆனால், 3 மாதங்களாக, அந்த காட்சி, அந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட வில்லை.
ஏன் இந்தச் செய்தி இங்கு இடம் பெறுகின்றதென்றால்….இதே போன்று ஏனைய வள்ளலார் சங்கங்களுக்கும் இது போன்ற நபர்கள் வந்து … பணம் வசூல் செய்வதற்காக வரலாம்…
கவனமாக இருக்க வேண்டும் என்ற நோக்கில்தான் இந்தச் செய்தி வெளியிடப்படுகின்றது.