DAEIOU - தயவு
வள்ளலார் நிறுவனங்களைக் குறிவைத்து வரும் சங்கடங்கள் (2).

வள்ளலார் நிறுவனங்களைக் குறிவைத்து வரும் சங்கடங்கள் (2).

கடந்த 18.2.2010 காலை 10.40 மணி.

சென்னை முகப்பேரிலிருந்து திரு ராமன் என்பவர் பேசினார்.

சார்…………..பத்திரிக்கை ஏன் சார் அனுப்பலை…

என்ன பத்திரிக்கையைப் பற்றி கேட்குறீங்க சார் ..?

இல்ல…சென்னை புத்தகக் கண்காட்சீல…

வள்ளலார் புத்தக ஸ்டாலில்,,,வெவ்வேறு பெயரில இரண்டு பத்திரிக்கை அனுப்புறோமுன்னு சந்தா கேட்டாங்க…

சரி…வள்ளலார் பக்தர்கள்…சரியாத்தான் இருக்கும் என்றுதொகை கட்டினேன்….

அதுல ஒரு பத்திரிக்கை வந்துருச்சு…

இன்னொரு பத்திரிக்கை இன்னும் வரலிங்களே…

அதுக்கு ஏன் இங்கே கேட்குறீங்க….

பத்திரிக்கை அனுப்புறேன்னு பணம் யார் வசூல் பண்ணினாங்களோ…அவங்களை கேளுங்க…

இல்லை சார்..ஒங்க பேரும் செல் நம்பரும்...அந்தப் பத்திரிக்கையில போட்டிருக்குங்க…

அப்படியா…

அதாவது, அந்த புத்தகக் கண்காட்சீல….2008ஆம் ஆண்டு…உள்ள ஒரு மாதப் பத்திரிக்கையை இலவசமாக் கொடுத்தாங்க..

அதுல ஒங்க பேரு…கெளரவ ஆலோசகர்னு போட்டு பிரிண்ட் அடிச்சுருக்குங்க…அதான்...ஒங்களக் கேட்டா தெரியுமேன்னு…..

இல்லங்க….யாரு ஒங்கட்ட வசூல் பண்ணினாங்களோ…

அவங்ககிட்ட தயவு செய்து கேளுங்கய்யா…

இது நடைபெற்ற உரையாடல்.

கேட்ட நபர் பொதுப்பணித் துறையில…கண்காணிப்பு பொறியாளரா பணிபுரிந்து பணி ஓய்வுக்குப் பின் சென்னையில் வசிப்பதாகத் தெரிவித்தார்.

வள்ளலார் பக்தர்கள் என்றால், பொய்சொல்ல மாட்டார்கள்…என்ற அதீத நம்பிக்கையில் வரக்கூடிய அன்பர்கள் பணம் செலுத்துகின்றனர். அவர்களது நம்பிக்கையைப் பொய் ஆக்கலாமா ?

ஏன் இத்தகைய நிலைப்பாடு…

இது வேதனைக்குரிய விஷயம்.

இதுபோன்ற நிகழ்வுகள் இனிமேலாவது வராமல் பார்த்துக் கொள்வவர்களா……காலம்தான் பதில் சொல்ல வேண்டும்…