சிங்கப்பூரில் திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பா இசை விழா. சிங்கப்பூரில் வள்ளலார் சமரச சன்மார்க்க சங்கம், ராமலிங்கா மிஷன் சார்பாக பொத்தாங் பாசிர் அருள்மிகு சிவ துர்க்கா ஆலயத்தில் 28.2.2010 ஞாயிறன்று அளர் வள்ளலார் இசை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. திரு வி. திருவேங்கடம் தலைமை வகித்து வள்ளலார் பற்றி சிறப்புரையாற்றினார். விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த டி.கே.எஸ்.கலைவாணனின் அருட்பா இசையமுது நிகழ்ச்சி நடைபெற்றது. மூத்த பத்திரிக்கையாளர் வெ. புருஷோத்தமன் இசைவணாரை அறிமுகப்படுத்த ராமலிங்அ மிஷன் தலைவர் பொன்னாடை போர்த்தி அருட்பா அருவி என்ற விருது வழங்கிச் சிறப்பித்தார். தமிழ் மறையான் வரவேற்புரை நிகழ்த்தினார். அப்பண்ணா பாமாலை புனைந்தளித்தார். வள்ளலார் பாடல்களைக் கொண்டே இசை நிகழ்த்தி ஆடிய பாதம், இன்னும் தயவு வரவில்லையா ? தடித்தவோர் மகனை, பெற்ற தாய்தனை மகமறந்தாலும் போன்ற திரு அருட்பா பாடல்களுக்கு பலத்த கரவொலி பெற்று கச்சேரி நடத்தி அனைவரின் பாராட்டுதல்களையும் கலைவாணன் பெற்றார். திரளான வள்ளலார் அன்பர்கள் கலந்து கொண்டு இசையமுது பருகி மகிழ்ந்தனர். அன்பர் திரு சிவக்குமார் அவர்களும் மேற்படி இசை விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார். (நன்றி : தினமலர் நாளிதழ்)
Write a comment