2010, Thai Poosam Function, Vadalur-Photos.
எண்கோண இருப்புக் கம்பிச் சுற்றாலை---வள்ளற் பெருமான் சொல்லியுள்ள நால்வகை ஒழுக்க நெறிகளில் இந்திரிய ஒழுக்கம் முதலில் நிற்கின்றது. இது உலகியற் சுக போகங்களில் மூழ்கிக் கிடப்போர், எளிதிற் கடக்கக் கூடாவண்ணம் மிகக் கடினமாகத் தோன்றும். இது குறித்து, நம் ஞான சபையில் உயர்ந்த இருப்புக் கம்பிச் சுற்றாலை முதல் பிரகாரமாய் அமைக்கப்பட்டது. இதனால் விளங்கும் தெய்வத்தன்மை சிதாகாச உணர்ச்சியின் பாற்பட்டதே. ஆதலால் ஆகாசத்தைக் குறிக்கும் அகர எழுத்துக்குரிய எட்டு என்ற எண் காரணமாக இவ்விருப்பு கம்பிச் சுற்றாலை எண்கோணமாய்க் காட்டப்பட்டது.
Write a comment