DAEIOU - தயவு
2010 தைப்பூசம்-வடலூர் காட்சிகள்.

2010 தைப்பூசம் வடலூர் காட்சிகள்-இருப்புச் சங்கிலி-நமது சுவாசத்தைக் குறிப்பது. சுத்த சன்மார்க்கத்தில், இச்சுவாசமாகிய உயிரனுபவம், அதாவது, ஜீவதயை முதற்படியாயிருக்கின்றது. ஆதலால், ஜீவதயை உடையவர்கள், கொலை புலையும் தவிர்த்தவர்கள் மட்டுமே உயிரனுபவ முடையவர்களென்றும் அதாவது இரும்புச் சங்கிலி இரகசிய மறிந்தவர்களென்றும் விளங்கலால், அவ்ர்கள் மட்டுமே அவ்விரும்புச் சங்கிலி வாயிலைக் கடந்து உட்செல்ல திருவருள் ஆணையால் அனுமதிக்கப்பட்டவர்களாவார்கள். எனவே, திருவருட்பிரகாச வள்ளற் பெருமான், சத்திய ஞான சபையினைச் சுற்றிலும், இருப்புச் சங்கிலியை நிர்ணயித்துள்ளார்கள்.