DAEIOU - தயவு
2010 தைப்பூசப் பெருவிழா, வடலூர்.பாரீஸ் சன்மார்க்க சங்கத்தவர்களின் ஆதங்கம்.

2010 தைப்பூசப் பெருவிழா, வடலூர்.

பாரீஸ் சன்மார்க்க சங்கத்தவர்களின் ஆதங்கம்.

நோட்டீஸில் வெளிப்பட்டது.

2010ஆம் ஆண்டு தைப் பூச பெருவிழாவில் கலந்து கொள்வதற்காக, பாரீசில் நடைபெற்றுவரும் சன்மார்க்க சங்கத்தின் அலுவல் சார் உறுப்பினராகிய திரு ஜெய பால கிருஷ்ணன் வருகை புரிந்திருந்தார். அவர், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமான் வடலூரில் ஏற்படுத்திய சத்திய ஞான சபையினைச் சுற்றிலும் அசுத்தமாக உள்ளதைக் குறிப்பிட்டு அதன் வெளிப்பாடாக சுத்தம் பேணப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் கூடிய ஒரு நோட்டீசினை, அனைத்து அன்பர்களுக்கும் வினியோகம் செய்தார்.

.

2010 தைப்பூசப் பெருவிழா, வடலூர்.பாரீஸ் சன்மார்க்க சங்கத்தவர்களின் ஆதங்கம்.

2010 தைப்பூசப் பெருவிழா, வடலூர்.பாரீஸ் சன்மார்க்க சங்கத்தவர்களின் ஆதங்கம்.

3 Comments
Vallalar Space Team India
sir your words are correct. i d o it.
Tuesday, February 9, 2010 at 22:20 pm by Vallalar Space Team India
KUMARESAN KRISHNAMURTHY
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
ஐயா,
அவர்களுடைய ஆதங்கம் உண்மையானது தான். ஆனால் நிறைய பணிகள் செய்ய வேண்டியுள்ளது. ஞான சபைக்கு சொந்தமான இடத்தில் முள் வேலி அமைத்தல் வேண்டும். அதிகமான மணல் புழுதி ஏற்படாமல் இருக்க சிமெண்ட் கற்கள் பதிக்கப்பட வேண்டும். நிறைய மரங்கள் நட வேண்டும். பெரு வெளியில் புல்வெளி பூங்கா அமைத்து இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். இது வெயிலின் தாக்கத்தையும் குறைக்கும். (உதாரணத்திற்கு தஞ்சாவூர் பெரிய கோயிலில் அமைந்து இருப்பது போல்)
மேலும் போதுமான கழிவறைகள் கட்டப்பட வேண்டும். குப்பைத் தொட்டிகள் தேவையான இடத்தில் அமைக்கப் பட வேண்டும்.
மேலும் வடலூர் சத்திய ஞான சபை அமைதியான இடமாக, சுத்தமான இடமாக இருக்க நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும்.
நன்றி.
Tuesday, February 9, 2010 at 23:16 pm by KUMARESAN KRISHNAMURTHY
Ramanujam jam
இதை நம்மவர்களுக்கு்ப் பாரீசிலிருந்தா வந்து சொல்லிக் கொடுக்க வேண்டும்.
நேரம்தான்.
Wednesday, February 10, 2010 at 08:50 am by Ramanujam jam