DAEIOU - தயவு
23.12.2009 முதல் 25.12.2009 வரை சென்னையில் திரு அருட்பா இசை மற்றும் நாட்டிய விழா.

23.12,2009 முதல் 25.12.2009 வரை சென்னையில் திரு அருட்பா இசை மற்றும் நாட்டிய விழா.

வருடந்தோறும் டிசம்பர் மாதத்தில், சென்னையில் கான சபாக்கள் தோறும் இசை மழை பொழிவதை அனைவரும் அறிவர்.

ஆனால் திரு அருட்பிரகாச வள்ளல் பெருமான் இயற்றிய திரு அருட்பாவிற்கு இசை விழா இது போன்ற கான சபாக்கள்

எடுப்பதில்லை.

கடந்த 5 ஆண்டுகளாக, சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்டிலிருந்து, திருபுவனம் ஆத்மநாதன் அவர்கள், திரு அருட்பாவிற்கென

சென்னையில் இசை விழா எடுத்துச் சிறப்பித்து வருகின்றார்.

இந்த ஆண்டில், தியாகராய நகரில் நெ.100, அபிபுல்லா சாலை, (வடக்கு உஸ்மான் சாலை} யில் அமைந்துள்ள பசும்பொன் தேவர்

மண்டபத்தில் சங்கீத் சாகர் கல்சுரம் ட்ரஸ்ட் மற்றும் இராசராசன் கல்வி பண்பாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து இந்த இசை விழாவினை நடத்துவதற்கு உத்தேசித்துள்ளனர்.

தினமும் மாலை 6.00 மணிக்கு திரு அருட்பா இசை விழா துவங்கி 7.25 வரையிலும், பின்னர், இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை திரு அருட்பா நாட்டிய இசை விழாவும் நடைபெற உள்ளன.

நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், இரவு உணவு அங்கேயே வழங்கப்படும்.

நிகழ்ச்சி நிரல் இந்த இணைய தளத்தில் கீழே உள்ள url linkல் அன்பர்கள் காண வேண்டப்படுகின்றது.

மேலும், தமிழ்நாடு மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலுமிருந்து, சன்மார்க்க அன்பர்களும் ஏனையோரும், தமது குடும்பத்தாருடன் இந்த அருமையான திரு அருட்பா இசை மற்றும் நாட்டிய விழாவில் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி, விழா அமைப்பாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.

http://vallalarspace.com/Ramanujam/Articles/3788