DAEIOU - தயவு
வள்ளலாரின் கொள்கையால், மனம் கனிந்த மற்றையோர்.

வள்ளலாரின் கொள்கையால், மனம் கனிந்த மற்றையோர்.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மதுரையில் உள்ள நாராயணபுரத்தில் இயங்கி வருகின்றது. வள்ளல் பெருமான் இயற்றிய திரு அருட்பாக்கள், திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா ஆகியோரின் திரு அருட்பா மற்றும் தயவுப் பாக்கள் முதலானவை வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 6.00 மணி பாராயணமாகப் பாடப் பெறும்.
அவ்வப்பொழுது விசேஷ நாட்களில், சான்றோர் பெருமக்கள் இந்த பெளண்டேஷனில் சுத்த சன்மார்க்கம் குறித்து சொற்பொழிவு நிகழ்த்துவதற்கு அழைக்கப்படுவர். அதன் மூலம் சுத்த சன்மார்க்க நெறி மதுரை நாராயணபுரம் பகுதிகளில் பரவி வருகின்றது.
இவ்விதம் நடத்தப்படும் வாராந்திர சொற்பொழிவு மற்றும் பாராயணத்திற்கு நாராயணபுரத்தில் வசிக்கும் திரு முருகேசனின் குடும்பம் குழந்தைகளுடன் வந்து கலந்து கொள்ளும். , வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் தினந்தோறும் இயங்கி வரும் நடமாடும் அன்னதான தருமச் சாலை, அனாதரவாக உள்ள வறுமை நிலையில் வசிக்கும் வயோதிகர்கள், மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டோர் ஆகியவர்களுக்கு அவர்கள் வசிக்கும் பகுதிக்கே நேரில் சென்று, மதிய உணவு அளித்து வருகின்றது.
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மூலம், அன்னதான தருமச் சாலையால் பயன் பெறும் வறுமை நிலையில் வசிக்கும் வயோதிகர்கள் மற்றும் மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு திரு முருகேசனின் மகன் செல்வன் கார்த்திக் ராமின் பிறந்த நாளினை முன்னிட்டு, அவர்களது குடும்பத்தினர், மதிய உணவு வழங்கும் பணியினை இன்று 22.11.2009 (ஞாயிறு) அன்று ஏற்றுச் செய்தனர்.
வள்ளலாரின் ஜீவகாருண்ய ஒழுக்கத்தைச் சிறப்புற செய்த திரு முருகேசனின் குடும்பத்தாருக்கு அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் அருள் கிடைப்பதாக.