DAEIOU - தயவு
17/11/2009-மதுரை சன்மார்க்க சான்றோர் திரு ஜோதி சுப்பிரணியம்-48வது நாள் விழா.

மதுரையில் சன்மார்க்கம் வளர்த்த பெரியவர் திரு ஜோதி சுப்பிரமணியம்

அவர்களின் 48வது நாள் ஆத்ம சாந்தி விழா.

இடம் .. மதுரை-அழகர் கோவில் ரோடு-பாரஸ்ட் ஆபீசர்ஸ் ரெஸ்ட் ஹவுஸ்

அருகில் உலக சமரச சன்மார்க்க சத்திய ஆலயம்.

=======================================================================================================================================

சங்கம் வளர்த்த மாமதுரை நகரில், சன்மார்க்கம் தழைக்கக் காரணமாயிருந்த பெரியவர் திரு ஜோதி

சுப்பிரமணியம் அவர்கள் (மறைந்த) 48-வது நாள் விசேஷ விழா 17.11.2009 (செவ்வாய்க்கிழமை) அன்று,


மதுரையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் - அழகர் கோவில் செல்லும் ரோட்டில் அவர் அமைத்த உலக சமரச சன்மார்க்க

வள்ளலார் ஆலயத்தில் நடைபெற்றது.

காலையில் அகவல் பாராயணம், திருவடிப் புகழ்ச்சி, அட்டகம், முதலானவை பாடப்பட்டது.

மதுரை அன்பர் திரு நந்தி சரவணன் அவர்களால் சன்மார்க்கக் கொடி கட்டப்பட்டது.

சன்மார்க்க அன்பர்கள் திரு பிச்சை, திரு ஹரி கோவிந்தன், அருட்பா திரு ரங்கநாதன்,

திரு நந்தி சரவணன், திரு தாயுமானவர், மற்றும் பலரால் திரு அருட்பா பாடல்கள்

இசைக்கப்பட்டன.

மறைந்த திரு ஜோதி சுப்பிரமணியம் அவர்களின் ஆன்மா சாந்தி அடைவதற்கு அனைவரும்

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரை வேண்டினர்.

திருமதி ஜி.எஸ். கோமதி நாராயணன் (இசை ஆசிரியை) காக்கை பாடினியார் மாநகராட்சி

பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சொக்கிகுளம், மதுரை, திருவருட்பா இசை மழை

பொழிந்து அனைவரையும், திருவருள் வலத்திற்கு இட்டுச் சென்றார்.


இவ்விழாவிற்கு, திரு ஜோதி சுப்பிரமணியம் அவர்களின் வாரிசுதார்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

The following pamphlets were distributed during the function.






மதியம் 1.40 மணி அளவில் அனைத்து நிகழ்ச்சிகளும் நிறைவுற்றன.

சுமார் 250 நபர்கள் சன்மார்க்க அன்பர்களும், ஏழை எளிய மக்களும், கலந்து கொண்டனர், அனைவருக்கும்

பசியாற்றுவித்தல் பணி நிறைவேற்றப்பட்டது.