DAEIOU - தயவு
மதுரை மாவட்டம்-சோளவந்தான் சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்.

மதுரை மாவட்டம்-சோளவந்தான் சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கு இடம் கொடுத்தவர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சோளவந்தான் நகரப் பஞ்சாயத்தில், சன்மார்க்க சங்கம் நெடுங்காலமாக அவ்வூரில் உள்ள புகழ் பெற்ற ஜெனகை நாராயணப் பெருமாள் கோவிலின் அருகே உள்ள ஒரு சிறிய ரூமில் நடைபெற்று வருகின்றது. தினசரி அன்னம் பாலிக்கும் பணி சிறப்பாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இதன் தலைவர் திரு மாரியப்பன் (ஓய்வு பெற்ற) தலைமை ஆசிரியர் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புவதற்கு நிரந்தரமாக ஒரு கட்டிடம் இல்லையே என்று மிகவும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்தார். சங்கம் கட்டி வள்ளற் பெருமான் வகுத்த சுத்த சன்மார்க்க கொள்கைகளை அனைவரும் அறியச் செய்ய வேண்டுமென்று விரும்பினார்.

அதே ஊரைச் சேர்ந்த திரு சேது ரத்தினம் என்ற அன்பர், சன்மார்க்க சங்கம் கட்டுவதற்கு 0.03 (மூன்று) சென்ட் நிலத்தினை மிகச் சொற்ப விலைக்கு தந்துள்ளார். கடந்த 4.10.2009 அன்று அங்கு நடைபெற்ற வள்ளற் பெருமானின் 187வது வருவிக்கவுற்ற திரு நாளில், இந்த விபரத்தை திரு மாரியப்பன் அவர்கள், அனைவருக்கும் தெரிவித்து, திரு சேது ரத்தினத்தை அன்பர்கள் மத்தியில் அழைத்து, கெளரவப்படுத்தினார்.

சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு இடம் கொடுத்து, புண்ணியம் தேடிக்கொண்ட திரு சேது ரத்தினம்

அவர்கள் .. இதோ ...

அவருக்கு சன்மார்க்க உலகம் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றது.