திரு அருட்பிரகாச வள்ளலாரின் 187வது வருவிக்க உற்ற நாள் விழா
ஸ்ரீ ராம் கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனத்தின் 18வது ஆண்டு விழா.
===================================================================
கோயம்புத்தூரில், எல்.ஜி.பி.நகரில் இயங்கி வரும் ஸ்ரீராம்
கார்த்திக் பாலிமர்ஸ் நிறுவனர் திரு ராம்தாஸ் அவர்கள், வள்ளற் பெருமானின்
சுத்த சன்மார்க்கக் கொள்கைகளில் தீவிர பற்றுக் கொண்டவர். அதனைக் கடை
பிடித்து வாழ்ந்து, தமது நிறுவன ஊழியர்களையும் அந்த நெறியிற் செலுத்திக்
கொண்டு வருகின்றவர்.
திண்டுக்கல் தயாநிதி சுவாமி சரவணான்ந்தா அவர்களின் தயவுக் கொள்கை
களின் பால் மிகு பற்றுக் கொண்டவர். வருடந்தோறும், தமது நிறுவனத்தின்
ஆண்டு விழாவினை, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கப் பெரு விழாவாக
அவர் கொண்டாடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அந்த வகையில், இந்த ஆண்டு, அந் நிறுவனத்தின் 18வது ஆண்டு விழாவினையும்
திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187வது வருவிக்கவுற்ற நாள் விழாவினையும்
கோயம்புத்தூரில் சிரவணம்பட்டியில் அமைந்துள்ள கெளமார மடாலயத்தில் கொண்டாடு
வதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
சுத்த சன்மார்க்க நெறி குறித்த போதனைகள் தவிர,. வள்ளற் பெருமானின் போதித்துச்
சென்ற ஜீவ காருண்ய ஒழுக்கத்தின் பிரகாரம் (1) பிராணிகள் வதையினைத் தடை செய்தல் மற்றும்
(2) மரம் வளர்க்கும் திட்டம செயல்படுத்தும் ஆர்வலர்களையும் அவர், இவ் விழாவில் பங்கு
கொள்ளச் செய்து அதன் சிறப்பினை பங்கேற்போர் அறியும் வண்ணம் செய்து வருகின்றார்.
நடப்பு ஆண்டில், 'கிரீன் இந்தியா" என்ற அமைப்பினைத் திறம்பட நடத்தி வரும் திரு E. நாகராஜன்
அவர்களைப் பங்கேற்கச் செய்தார்.
திரு நாகராஜன், கிரீன் இந்தியா அமைப்பின் மூலம், தான் வெளியிட்டுள்ள சிறு
துண்டுப் பிரசுரத்தை அங்குள்ளவர்களிடம் வினியோகித்தார். அதன் பிரதி கீழே தரப்பட்டுள்ளது.
Page.2
இந்த உலகத்தை வெப்ப மயமாவதிலிருந்து காப்பாற்றவும், மனித குலம் வாழ
வகை செய்வதற்காகவும், அனைவரும் கண்டிப்பாக வீட்டிற்கு ஒரு மரம் வளர்க்க
வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். வனங்களைப் பாதுகாக்க அனைவரும் உறுதி
மொழி எடுக்கும்படியும் அவர் கேட்டுக் கொண்டார்.
வள்ளற் பெருமான் திரு அருட்பாவில் பாடிய "வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன்" என்ற அருள் உரைதான் தமக்கு, இந்த இயக்கத்தினைத் துவக்க ஆர்வம்
கொள்ளச் செய்தது என்றார் அவர்.
அவரது தொடர்பு முகவரி.
Green India, (Regd)
33/3, Sri Ram Nivas, Srinivasa Nagar,
Coimbatore 641 047, Tamil Nadu, India.
Phone: 98947 19113, 98944 00685.