DAEIOU - தயவு
சென்னையில் வள்ளலாருக்கு ஆலயம் எடுப்பதற்கு மதுரை ஆதீனம் ரூ.ஐந்து லட்சம்-தினத்தந்தி செய்தி.

சென்னையில் வள்ளலாருக்கு ஆலயம் எடுப்பதற்கு மதுரை ஆதீனம் ரூ.ஐந்து லட்சம் வழங்கவிருத்தல்.

தினத்தந்தி நாளிதழ் சென்னைப் பதிப்பு 1.10.2009 செய்தி.

சென்னைப் பதிப்பு தினத்தந்தி 1.10.2009 (வியாழக் கிழமை) நாளிதழில் ஒரு செய்தி பிரசுரமாகி இருந்தது.

அச் செய்தியின் சுருக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

தவத்திரு ஊரன் அடிகளாரின் பவள விழா.

தவத்திரு ஊரன் அடிகளாரின் பவள விழா சென்னை நாரத ஞான சபாவில் நடந்தது. அவர் எழுதிய

(1) சைவ ஆதீனங்கள்,

(2) புரட்சித் துறவி வள்ளலார்

(3) பத்மபூஷன் அருட் செல்வர்,

(4) பத்மஸ்ரீ நல்லி குப்புசாமி செட்டியார் வாழ்க்கை வரலாறு

ஆகிய புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, நா. மகாலிங்கம், ஆர். எம். வீரப்பன், ஜெகத் ரட்சகன், அவ்வை நடராஜன், சீர்காழி கோ. சிவ சிதம்பரம், கணபதி ஸ்தபதியார் ஆகியோருக்கு அவரவர் துறைகளில் சிறப்பாக செயல் பட்டதற்காக சமரச சன்மார்க்க ஆராய்ச்சி நிலையம் சார்பில் சிறப்புப் பட்டங்கள் வழங்கப் பட்டன.

கல்வி சமூகம் சன்மார்க்கத்தில் சிறந்து விளங்கும் நா. மகாலிங்கத்துக்கு பல்கலைச் செம்மல் பட்டம் தரப்பட்டது.

மதுரை ஆதீனம் தனது உரையில், சென்னையில் வள்ளலாருக்கு ஆலயம் ஒன்றை நா. மகாலிங்கம் எழுப்ப வேண்டும் என்றும், தனது பங்காக ரூ.ஐந்து லட்சத்தை உடனே தரத் தயார் என்றும் மதுரை ஆதீனம் குறிப்பட்டார்.