இராமலிங்கர் பணிமன்றம்
44ஆம் ஆண்டு வள்ளலார் மகாத்மா காந்தி விழா நிகழ்ச்சி
நாள். 30.9.2009 நேரம் மாலை 6.00 மணி.
"அருட்ஜோதி காந்திய விருது"
ஆனைமலை மா. ரங்கநாதன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
விவரம் வருமாறு.
30.9.2009 அன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடைபெற்ற மேற்காணும் விழாவில், அருட் செல்வர் டாக்டர் திரு நா.மகாலிங்கம் அவர்கள், ஆனைமலை திரு மா. ரங்கநாதன் அவர்களுக்கு, அவர் ஆற்றி வரும் காந்திய சிந்தனை சிறப்புச் செயல்கள், ஆற்றி வரும் தொண்டு முதலானவற்றைப் பாராட்டும் விதத்தில் அவருக்கு, "அருட்ஜோதி காந்திய விருது" வழங்கி கெளரவித்தார்.
தமது ஏற்புரையில், திரு மா. ரெங்கநாதன், ஏழை எளிய மக்களுக்கு நாம் செய்யும் தொண்டில் கிடைக்கும் நிம்மதி வேறு எதிலுமே கிடைப்பதில்லை என்ற வள்ளலாரின் கோட்பாடுகளை மேடையில் முழங்கினார். தமது துணைவியாரின் துணையுடன் தான் இந்தச் செயல்களை எல்லாம் தம்மால் பார்க்க முடிந்தது என்றார். அவரது துணைவியாரையும் அருட் செல்வர் மேடையில் அழைத்து கெளரவித்தார்.
திரு மா. ரெங்கநாதனுக்கு விருதும் வழங்கி, பண உதவியும் அருட் செல்வரால் வழங்கப்பட்டது.
திரு மா ரெங்கநாதன், தமது உரையில் தமக்கு இவ் விழாவில் வழங்கப்பட்ட பண உதவியினை நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதற்காக தம்மால் அனுப்பப் படுகின்றது எனத் தெரிவித்தார்.
இந்த விழாவில் கலந்து கொண்ட அன்பர்கள் அனைவரையும் தாம் கோயம்பத்தூர் மாவட்டம், ஆனைமலையில் நடத்தி வரும் மகாத்மா காந்தி ஆசிரமத்திற்கு வந்து செல்லும்படிக் கேட்டுக் கொண்டார்.
அவரைப் பற்றிய செய்தி அடங்கிய சிறு துண்டு பிரசுரம், விழாவில் கலந்து கொண்ட அன்பர்களுக்கு வழங்கப்பட்டது.
மனித நேய மிக்க மாண்பு கொண்டவர் இவர்.
அது, இணைய தள வாசகர்களின் கவனத்திற்கு ......