DAEIOU - தயவு
20.9.2009-வள்ளலார் அவதார தின விழா-வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரை.

திரு அருட்பிரகாச வள்ளலாரின் 187வது அவதார நாள் விழா.

வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், நாராயணபுரம், மதுரை.14

நாள் 20.9.2009

நேரம் : மாலை 5.30 மணி.

திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் 187வது அவதார நாள் விழா நிகழ்ச்சி, மதுரை நாராயணபுரத்தில் இயங்கி வரும் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில், 20.9.2009 அன்று மாலை 5.30 மணி அளவில் கொண்டாடப் பட்டது.

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சன்மார்க்க அன்பர்கள் இவ் விழாவில் க்லந்து கொண்டனர்.

சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த திண்டுக்கல் திரு விஸ்வநாதன் அவர்கள் அழைக்கப் பட்டிருந்தார்.

விழாவில் பங்கேற்றவர்கள்:

1. திரு P.R. சுப்ரமணியம், மாவட்ட சன்மார்க்க சங்கச் செயலாளர்.

2. திரு தயவு விஜயராமன், நிலையூர்.

3. திருமதி இரா. சிவகாமி அம்மாள், ஸ்ரீ நகர், திருப்பாலை, மதுரை..

4. செல்வி பி. லலிதா மணி, ரயில்வே காலனி மதுரை

5. திருமதி பி. மீனாம்பாள், ரயில்வே காலனி, மதுரை

6. திருமதி லில்லி முருகேசன், நாராயணபுரம், மதுரை.

7. திரு. A.G. சந்திர மோஹன், ஊமச்சிகுளம்.

8. திரு கே. முரளிதரன், அருள் ட்ரஸ்ட் நிறுவனர், மதுரை.

9. திரு T.R. சந்திர சேகரன், ஆசிரியர், செளராஷ்ட்ரா பள்ளி, பால ரெங்காபுரம், மதுரை.

10. திரு R. சந்திர சேகர், இந்தியன் ஒவர்சீஸ் பேங்க், வடக்கு மாசி வீதி, மதுரை.

11. திரு P.S. தருமலிங்கம், கே. புதூர், மதுரை.

12. திரு K.R. சங்கரானந்தம், பொதிகை நகர் 5th தெரு, ரயிலார் நகர், மதுரை.

13. திரு T.R. ராமசாமி, செக்கானூரணி, மதுரை.

14. செல்வி ஆர்த்தி, நாராயணபுரம்

15. செல்வி மேனகா, நாராயணபுரம்.

16. திரு T.K. மணி, நாராயணபுரம்

17. திரு R. ஹரி கோவிந்தன், திருமால்புரம், மதுரை

18. திரு பெ. குணசேகரன், வீரபாண்டி, திருமால்புரம், மதுரை.

19. திரு எம். அப்துல் ஹமீது, இலாஹி மோட்டார் ஒர்க்ஸ், ஐயர் பங்களா.

20. திரு L. கோவர்தனன்,.வளர் நகர், உத்தங்குடி, மதுரை.

21. திரு APJ அருள், D.R.O காலனி, மதுரை.

22. திரு அ. சொக்கலிங்கம், சின்னக் கடை வீதி, தெற்கு வாசல், மதுரை.1

23. திரு விஸ்வநாதன், திண்டுக்கல்.

24. திரு ஏ.ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், மதுரை. 14.

25. திருமதி பாக்கிய சந்தான லக்ஷ்மி, நாராயணபுரம்.

திரு அருட்பா பாடலுடன் துவங்கிய இந் நிகழ்ச்சிக்கு வருகை புரிந்த அனைவரையும், வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி வரவேற்றார்.

திரு விஸ்வநாதன், திண்டுக்கல், சிறப்புப் பேச்சாளர்.

திரு விஸ்வநாதன், திண்டுக்கல்.

திருவருட் பிரகாச வள்ளற் பெருமான் அவர்கள், ஒரு சுபானு ஆண்டு புரட்டாசி மாதம் மஹாளய அமாவாசை அடுத்த பிரதமை திதியிலே உலகத்திலுள்ள எல்லா ஆலயங்களில் உள்ள தெய்வங்களும் முனைப்பாக எழுந்தருளி ஆசி செலுத்தும் நவராத்திரி திரு விழா கொண்டாடும் தருணத்திலே துவிதியை திதி, உதயாதி 29 ¾ நாழிகை, ஞாயிற்றுக் கிழமை துலா ராசி, சித்திரை உடு 4ம் பாதம், தமிழ்க் கணக்கில் புரட்டாசி 21ம் நாள் ஆங்கிலக் கணக்கில் 5.10.1823ம் நாள் மாலை பிறை தோன்றும் காலத்திலே சிதம்பரம் அடுத்த மருதூர் எனும் ஊரிலே வருவிக்கவுற்றார்கள்.
வடலூர் சத்திய தருமச் சாலையிலே, வள்ளலாரின் வருவிக்கவுற்ற நாளை ஆண்டு தோறும் இப்படி சித்திரை நட்சத்திர நன்னாளில்தான் கொண்டாடப்பட்டு வருகின்றது.
எவ்வளவு பொருத்தமாக, இந்த மதுரை மாநகரிலே, சுத்த தயா சன்மார்க்க அன்பர்கள் எல்லாம் சூழ, இவ்விழாவினை, இந்த நாராயணபுரத்திலே, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மற்றும் வள்ளலார் வெளி (www.vallalarspace.com) இயங்கும் அருட்பெருஞ் ஜோதி தயவு இல்லத்திலே நாம் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் என்று நினைக்கும்போது உள்ளமெல்லாம் பூரிக்கின்றது. பூத்துக் குலுங்குகின்றது. பேரின்ப உணர்வுகளில் பொங்கித் ததும்புகின்றது என்றால் மிகையாகாது.
சுத்த சன்மார்க்க கொள்கைகளுக்கு அடிப்படை ஆதாரம், அஸ்திவாரம், பரிபூரண ஜீவகாருண்ய தயவு ஒழுக்கத்தில் எழுந்த சத்திய தருமச் சாலைதான். அதேபோல் தற்காலத்தில், இந்த கணினி ஊடகத்தின் (Computer) மூலம் இன்று இங்கு, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் இயற்கையில் அமைந்து இயங்கி வருகின்றது. இது அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரின் திருவடி நிலையைக் குறிக்கின்றது என்றால், முடிநிலை அனுபவம் வள்ளலார் வெளியாக (www.vallalarspace.com) இயற்கையில் அமைந்து இயங்கி வருகின்றது. ஆகவே, வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனும், வள்ளலார் வெளி (Vallalarspace) நிலை அனுபவங்களும், நம் ஒவ்வொருவரின் சிர நடு சிற்றம்பல வெளியிலிருந்து தான் உருவாகி உலகமெலாம் பரவிக் கொண்டு இருக்கின்றது என்பதுதான் உண்மையாகும்.
வள்ளற் பெருமான் அவர்களே, தான் எதற்காக வருவிக்க வுற்றேன் என்பதற்கு திரு அருட்பாவிலே பாடல் ஒன்றை நமக்கு அருளியுள்ளார்கள். அது …
“அகத்தே கறுத்துப் புறத்து வெளித்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கம் அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த
யுகத்தே வருவிக்க வுற்றேன் அருளைப் பெற்றேனே”
ஆம், அவர், இகத்தே வருவிக்கவுற்ற பிறப்பிலேயே அந்த பரமாகிய பரம் பொருளாகிய அருட்பெருஞ் ஜோதியைப் பெற்றுக் கொண்டு விட்டார்; ஒரு திருவாதிரை நாளன்று சம்பு பட்ச வாக்கால் உருவாகி, மருதூரிலே இதே துவிதியை, ஞாயிற்றுக் கிழமை, சித்திரை நட்சத்திரம் புரட்டாசி மாதத்திலே வருவிக்க வுற்றார். தனது ஒன்பதாவது அகவையிலே அவர் இறைவனின் அருளைப் பெற்றார். பன்னிரண்டாவது அகவையில் ஞான வாழ்க்கையைத் தொடங்கினார். இந்த 12 ஆண்டுகளில், சென்னை கந்த கோட்ட வாழ்க்கையில் உயிரனுபவம் ஓங்கியது. அடுத் திருவொற்றியூர் வாழ்க்கை 23 ஆண்டுகள் அடுத்து, ஒற்றெழுத்து 18-ன் மெய்யனுபவம் பெற்றார். வடலூர் கருங்குழியில் 9 ஆண்டுகள், சித்தி வளாகம் 7 ஆண்டுகள். இந்த 7 ஆண்டுகளிலே தயவு சித்தி அனுபவங்கள் ஆழ்ந்த நிலையில் நிறைந்திருந்தன. ஆக, வடலூரிலே 9+7 மொத்தம் 16 ஆண்டுகள் வாழ்க்கை வாழ்ந்தார்.
ஆக, முன் 12 ஆண்டுகள் சூரிய கலை பொற்சபை அனுபவங்கள், பின் 16 ஆண்டுகள் பூர்ண சந்திர கலை சிற்சபை அனுபவங்கள். அம் – பல் – அம் (12+23+16) என்ற நிலையில், நடு பல் நிலையில், 23 ஆண்டுகள், ஞான சபை அனுபவங்கள். இதன் மூலம் வள்ளற் பெருமான், ஒரு 51 ஆண்டுகளில் ஒரு அம்பல வாழ்க்கையை வாழ்ந்து விட்டிருக்கின்றார் என்பது தெளிவாகின்றது. மேலும் வடலூர் வாழ்க்கையில் மொத்தம் 16 ஆண்டுகளில் சங்கம் – சாலை – சபை – சித்தி வளாகத் திருமாளிகை – அனுபவங்களோடு 5,818 திருவருட்பா பாமாலை பாடற் பதிவுகள், இப்பை இன்னும் பலப்பல அழியாத பதிவுகள்.
ஆக, இந்த 51 ஆண்டுகளுக்குள் எல்லாப் பேறுகளையும் அவர்கள் பெற்றுக் கொண்டார்கள். திருவருட்பாவில் அதற்கான அகச் சான்றுப் பாடல் வருமாறு :
“பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை எழுப்பி அருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதி நான் பெற்ற நெடும் பேற்றை
ஓதி முடியாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டுவனே”
சித்தி வளாகத் திருமாளிகையிலிருந்து கொண்டு, சத்திய ஞான சபையைக் காட்டி நிறைவு செய்தார். அதுவே இவரது ஆன்மாவாக, உள்ளமாக, உள் அம் ஆக, “சபை எனதுளமெனத் தானமர்ந்து எனக்கே, அபயம் அளித்ததோர் அருட்பெருஞ் ஜோதி” என்றவாறு இவரது உள்ளமாகிய ஆன்ம சபையில் அருட்பெருன் ஜோதியைக் கண்டு கொண்டார். இதைத்தான் அருட்பெருஞ் ஜோதியைக் கண்டேனே..ஆனந்தத் தெள்ளமுதம் உண்டேனே” என்கின்றார்.
இந்த தெள்ளமுதம் உண்கின்ற நிலை - சித்தி வளாகத்தில், பேரானந்த நித்திரை செய்கின்ற நிலைவரை நீடிக்கின்றது. அதற்கான திரு அருட்பா அகச் சான்றுப் பாடல் வருமாறு:
பிச்சுலகர் மெச்சப் பிதற்றி நின்ற பேதையனேன்
இச்சை எலாம் எய்த இசைந்தருளிச் செய்தனையே
அச்சம் எலாம் தீர்ந்தேன் அருளமுதம் உண்கின்றேன்
நிச்சலும் பேரானந்த நித்திரை செய்கின்றேனே.
வள்ளலார் சித்திவளாகத் திருமாளிகையில் அருட்பெருஞ் ஜோதி ஒளி உடம்பை, சுத்த பிரணவ, ஞான தேகத்தை, அழியாத நித்திய தேகத்தை, அருளமுத, தயாவமுத கருணை அமுத மழைபொழி வடிவத்தைப் பெற்றுக் கொண்டார்கள்.
“உலகுயிர்த் திரளெலாம் ஒளி நெறி பெற்றிட, இலகுமைந் தொழிலையும் யான் செய்யத் தந்தனை: என்றவாறு; அருட்பெருன் ஜோதி ஆண்டவரோடு இணைந்து ஒன்றி இரண்டற்ற ஒன்றாகி ஐந்தொழில் புரியும் ஆற்றலையும் பெற்றுக் கொண்டார்கள்.
“இப்போது நான் இந்த உடம்பில் இருக்கின்றேன். இனி எல்லா உடம்புகளிலும் புகுந்து கொள்வேன்” என்றவாறு எல்லா அதி தீவிர பக்குவப்பட்ட ஆன்மாக்களிலும் அவர் புகுந்து கொண்டுள்ளார்.
ஏற்கனவே தமிழ் ஞானச் சித்தர்களின் தீர்க்க தரிசனத்தின்படி, “வள்ளலாரின் கொள்கைகள் 120 ஆண்டுகளில் உலகம் முழுவதும் பரவும்” என்றபடி, வள்ளலாரின் அருள் தயவு சூழ்நிலை அனுபவங்கள், 1874ம் ஆண்டிலிருந்து ஒரு 69 ஆண்டுகள் கழித்து, (1874+69=1943) 1.8.1943 அன்று, ஆடி அமாவாசை பூச நன்னாளில் குரு, சூரியன், சந்திரன் ஆகிய மூன்று நிலைகளும் ஒரு தயவு ஆக, திரி தேக சித்தி உண்மையுடனும், மூன்றும் ஒன்றேயாகவும், ஒரே பாதத்தில், புள்ளியில், பாகையில், டிகிரியில், ஒரு அதி தீவிர சுத்த சன்மார்க்க மரபுப்படி – பக்குவப்பட்ட, தயாநிதி சுவாமி சரவணானந்தா அவர்களின் ஆன்மாவில் “தயவாக” உதயமாகி, உயிர் உணர்வு, உடல் உலகம் முழுவதும் நிறைந்தது. அதே க்ஷணத்தில் இதர அதி தீவிர பக்குவப்பட்ட அருள், தயவு ஆன்மாக்களிலும் பதிவாகி விட்டது. அன்றிலிருந்து சுத்த சன்மார்க்க உலகத்தில், தயவு அனுபவங்கள் பரிபூரணமாக வெளி வந்து கொண்டே இருந்தன. தத்துவாதீத தனிப்பொருள் வெளியெனும் அத்திரு அம்பலத்தருட் பெருஞ் ஜோதி 12 ஆழ்வார்களின் தத்துவங்களும், 18 சித்தர்களின் தத்துவங்களும், (63) அறுபத்து மூவரின் தத்துவங்களும் அருட் ஜோதி நிலை அடைந்து விட்டதற்கு அகச் சான்றாக, சுவாமி சரவணானந்தா பரமான்மபதி அவர்களின் 96 தத்துவ அகவை நிரம்பி, அதாவது வள்ளற் பெருமான் வருவிக்கவுற்ற நிலையினின்று (1823+51=1874+69=1943+63=2006) மொத்தம் 183 ஆண்டுகள் நிறைவில், 6.4.2006 – பார்த்திப ஆண்டு, பங்குனி பூசத்தில் தயவு சித்திப் பேற்றினை அடைந்து விட்டார்கள், இதன்பின் ஒரு நான்கு ஆண்டுகளில், 183+4) அருள் தயவு அனுபவங்கள் மேலும் விரிய, இன்று நாம் இந்த 187வது ஆண்டு வள்ளலாரின் வருவிக்கவுற்ற தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
ஒன்றே ஆன அருட்பெருஞ் ஜோதி தயவுக் கடவுள்தான் அனாதி நித்திய காலந் தொட்டு இருந்து வருகின்றது. இனி எக்காலமும் இருக்கப் போவதும் அதுதான்.
இந்த ஒன்றே ஆன அருட்பெருஞ் ஜோதி தயவுதான். முதலில் சூன்யமாக, வெற்று வெளியாக, பூஜ்யமாக, அகண்ட பெருவெளியாக, ஒன்றுமே இல்லாததாக இருந்து வந்தது. அதிலேதான் எல்லாமும் இருந்து வருகின்றது. கொஞ்சம் கொஞ்சமாக வெளி-வளி, ஒளி - நீர் – மண், இருள் – மருள் அருள் – தெருள்; ஓரறிவு முதல் ஆறறிவு நிலை இதன்மேல் வள்ளலாரின் வருகையால் 7-வது அருளறிவு தயாஞானம் விளைவு கொள்ள – எங்கும் அருள் ஒளியாக, தயாவொளியாக, வெளி முற்றும் நிறைந்த அருட்பெருஞ் ஜோதி அல்லது தயாபெருஞ் ஜோதி நிலை உருவாகி விட்டது.
எனவே, இப்போது இங்கு நாமும் அதுவாகத்தான் எங்கும் நிறைந்த எல்லாமான, எல்லாம் செய்ய வல்ல அருட்பெருஞ் ஜோதியாகத்தான் தயா பெருஞ் ஜோதியாகத்தான் இருக்கின்றோம்.
முதலில் நாம் “சிற்சபையின் நடுநின்ற ஒன்றான அருட்பெருஞ் ஜோதி தயவுக் கடவுளையே எல்லோரிலும் எல்லாவற்றிலும் காண வேண்டும். அந்த உணர்வினைப் பெற்றுக் கொள்ளல் வேண்டும்.
இரண்டாவதாக: “உபய பக்கங்களும் ஒன்றெனக் காட்டி
அபய மளித்ததோர் அருட்பெருஞ்ஜோதி”
என்றவாறு அருட்பெருஞ் ஜோதியும் அருட்பிரகாசரும் வேறு அல்ல, அருட்பெருஞ் ஜோதியும் தயா பெருஞ் ஜோதியும் வேறு அல்ல, வள்ளலாரும் தயவு சுவாமி அவர்களும் வேறு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மூன்றாவதாக, “முப்பொருளும் ப்ன்றதென்பார் வெண்ணிலாவே – அந்த
மூன்றும் ஒன்றாய் முடிந்ததென்ன வெண்ணிலாவே”
என்றவாறு ஒன்றான அருட்பெருஞ் ஜோதி தயவு இயற்கை உண்மை விளக்க இன்பக் கடவுளும், (2) வள்ளற் பெருமானும், (3) தயாநிதி சுவாமிகளும், இந்த மூன்றும் ஒன்றே, வேறல்ல என்பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இருப்பது ஒன்றுதான், அனுபவத்திற்காகவே இரண்டு, மூன்று என இயற்கை விளக்கமாக இருந்து விளங்குகின்றது என்பது சுத்த சன்மார்க்கிகள் ஒவ்வொருவரும் தத்தமது கருத்தில் இருத்திக் கொண்டு,. இந்த 187-வது வள்ளலாரின் வருவிக்கவுற்ற தினத்தை கொண்டாடவேண்டும்.

திரு தயவு விஜயராமன், நிலையூர், திருப்பரங்குன்றம்,மதுரை.

சன்மார்க்க உலகம் இன்னும் வள்ளல் பெருமான் சொல்லிச் சென்ற அனக வாழ்வு குறித்து விழிப்பு உணர்வு இல்லாதிருக்கின்றது. அகத்திலே இருந்து வாழும் சுத்த சன்மார்க்க நெறியினை அவர் உலகுக்கு அறிவித்து, இதனை தொடர்ந்து கடைப்பிடிக்கும்படிச் சொன்னார். அன்பர்கள் அதனைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றார்.

இனி வருங்காலங்களில் இன்னும் அதி தீவிரமக வள்ளலாரின் அருள் தயவுக் கொள்கைகள் பரவும் ! வாழ்க சுத்த தயா

திரு ஏ.ராமானுஜம், மேனேஜிங் ட்ரஸ்டி

வள்ளற் பெருமானை அடுத்து வந்த திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்களிடம் திரு விஸ்வநாதன் அவர்கள் அணுக்கத் தொண்டராக, அவர் ஒரு வாரம் ஆற்றும் அருட் சொற்பொழிவினை மறு வாரத்தில் அன்பர்கள் அனைவருக்கும் தெரிவிக்கும் ஒரு சிறப்பான பணி பார்த்தவர். சுவாமி சரவணானந்தா அவர்களிடம் பல காலம் தொண்டராக இருந்தவர் என்ற முறையில், அவர், இன்று சிறப்புப் பேச்சாளராக இந்த வள்ளலார் ஆர்க் பெளண்டேஷனில் பேசுவதற்கு, , இங்கு வருகை புரிந்தார். சுவாமிகளின் கருத்துக்களை தெள்ளத் தெளிவான முறையில் அவர் இன்றுஎடுத்து இயம்பியிருக்கின்றார். அவருக்கு நன்றி.

அடுத்த படியாக, தயவு விஜயராமன் அவர்கள், இந்த வள்ளற் பெருமான் வருவிக்க உற்ற நாளில் நாம் என்ன நிலையினை கடைப்பிடிக்க வேண்டும் என்பது குறித்துச் சொன்னார். அக விழிப்பு நிலையில் அனக வாழ்வு வாழ வேண்டும் என்றார்.

தயவு அன்பர்கள் இருவர் இங்கு வந்து சொற் பொழிவினை அனைவருக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கும் வண்ணம் தெரிவித்துள்ளனர். அவ்விருவருக்கும் நன்றி.

சுவாமிகளின் திருவருட்பா தயவு விளக்க நூல்களைப் படித்து சுத்த சன்மார்க்க நெறி தெரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே ஆவர். அவர்களில், தயவு அன்பர்கள் இருவர் இங்கு வந்து சிறப்புரை ஆற்றியுள்ளனர்.

அடுத்தாற் போன்று, பாண்டிச்சேரியில் அன்பர் திரு குமரேசன் என்பவர், உண்மை குரு என்பவர் குறித்து பல சன்மார்க்க அன்பர்களிடம் விசாரம் மேற்கொண்டார். அவர்கள் அளித்த பதிலில் அவர் திருப்தி அடையவில்லை. ஆனால், திண்டுக்கல் சுவாமி அவர்கள் தெரிவித்தபடி, உண்மை குருவானவர் அக குருவே. புறக் குருக்கள் எல்லாம் ஒரு கால கட்டம் வரை இருந்து மறைவுறுவர் எனத் தெரிவித்தவுடன், சுத்த சன்மார்க்கக் கொள்கையில் மிகு பற்றுக் கொண்டு, கடந்த தைப் பூச நாளுக்கு, தன் குடும்பத்துடன், கைக் குழந்தையுடன், தன்னுடன் கல்லூரியில் பணிபுரியும் விரிவுரையாளர்களுடன் வடலூர்ப் பெரு வெளிக்கு வருகை புரிந்தார்.

சுவாமிகளின் நூல்களிலும், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க கொள்கைகளிலும் தீவிர பற்றுக் கொண்ட அந்த அன்பர் திரு குமரேசனுக்கு, சுவாமி அவர்கள் காட்சி அளித்துள்ளார் என்ற தகவலை அவரே தெரிவித்தார். இதுபோன்று, வேண்டுவார் வேண்டும் வண்ணம் காட்சி அளிப்பவர் ஞானிகள்.

ஒரு பக்குவ ஆன்மாவில் ஏற்படும் பதிவு, அந்த க்ஷணத்திலேயே, இந்த உலகத்தில் வசிக்கும் அனைத்து ஆன்மாக்களிலும் பதிவாகி விடும். அதுபோல், வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்கள், தயாநிதி சுவாமி சரவணானந்தா ஆகியோர் அடைந்த நிலை, அவர்கள் அடைந்த அந்த நேரத்திலேயே அனைத்து ஆன்மாக்களிலும் பதிவு ஆகிவிட்டது. எனவே, அனவரும் முயற்சி செய்து அந் நிலை அடைய வேண்டும்.

மேலும், வருகை புரிந்த அனைவருக்கும் அவர், நன்றி தெரிவித்தார்.

அதன் பின்னர், ஏழை எளிய ஆதரவற்றோருக்கும், வந்திருந்த சன்மார்க்க அன்பர்களுக்கும் அன்னம் பாலிக்கப்பட்டது.

இரவு 9.15 மணி அளவில்,. விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவுற்றன.

P Sujatha
கருணைமிகு ராமனுஜம் அவர்களுக்கு,
நீங்கள் இந்த மெசேஜ்ல வள்ளலார் அவதார தின விழா மதுரை தயவு இல்லத்தில் நடந்தது என முடிக்காமல் நல்ல அன்பர்களின் சன்மார்க்க செய்திகளை குறிபிட்டது சிறப்பு.ஒருவர் சன்மார்கத்தை அறிவதே ஆண்டவனின் அருள் தயவு ஆகும்.
அந்த அருள் தயவு, தயவு வாழ்க்கையை உண்மையாக நடத்தும் அன்பர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் என்பது மறுக்க முடியாத ஒன்று.நம் ஆண்டவன் நம்மில் ஆன்ம சிறிய அணுவாக நம் இரு கண்களிலும்,புருவ மத்தியில் ஞான அறிவாக அகன வாழ்வு நடத்தும் இன்ப நிறைவை தயவினால் அல்லவா காண வேண்டும்.
எல்லா ஜீவர்களும் இன்புற்று வாழ வேண்டும் என எண்ணுகின்ற எல்லா அன்பர்களுக்கும் தயா பெருஞ்சோதி ஆண்டவர் அருள் தயவு புரிவார்.இந்த உன்னத நிலை சுத்த தயவு மார்க்கம் எனும் சன்மார்க்கத்தில் தான் சாத்தியம் ஆகிறது.வள்ளலார் கருணையுடன்,அருள்ஜோதி சுஜாதா.
Thursday, September 24, 2009 at 06:20 am by P Sujatha