DAEIOU - தயவு
15.9.2009-காஞ்சீபுரம்-திருவருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம் பூசநாள் விழா.

திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையம், அசோக் நகர், காஞ்சீபுரம்.

மாதப் பூச நாள் விழா

நாள் 15.9.2009

இந்த மாசப் பூச நன்னாளில், கொடி வணக்கம், பாடி நிகழ்ச்சி துவக்கப்பட்டது.

பின்னர், வள்ளலார் சிறுவர் இல்லக் குழந்தைகள் மூலம் அருட்பெருஞ் ஜோதி அகவல் பாராயணம் செய்யப்பட்டது. இப்பூச விழாவினை திரு டி.எஸ்.இராமசாமி, ஹைதராபாத், ஆந்திரா மாநிலம் மற்றும் திரு வி.கோதண்டராமன், திரு பி.வி.வெங்கடேசன், செயலாளர் ஆகியோர் உடனிருந்து செய்தனர்.

செயலாளர் திரு பி.வி.வெங்கடேசன், அவர்கள், சுத்த சன்மார்க்கத்தின் மாண்பினை அனைவரும் அறியும் வண்ணம் எடுத்தியம்பினார். வள்ளலார் சொல்லிச் சென்ற இந் நெறியில் அனைவரும் ஒருமை மனத்துடன் சத்விசாரம், பரோபகாரம் முதலானவற்றைத் தமது வாழ்வில் கடைப்பிடித்து வாழும்படியும்

அவர் அனைவரையும் கேட்டுக் கொண்டார்.

சன்மார்க்க அன்பர்களும், சுற்றிலும் வசிக்கும் அன்பர்களும் திரளாக இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.