DAEIOU - தயவு
மானாமதுரை அருகே மூங்கில் ஊரணியில் ஒரு சன்மார்க்கி-மற்றும் ஞான சபை கட்டுமானம்..

சிவகங்கை மாவட்டம்-மானாமதுரை தாலுகா-மூங்கில் ஊரணி

கிராமத்தில் ஒரு சன்மார்க்கி-உண்மைச் சம்பவம்.

புதிதாக திருமதி ஜெய வள்ளி நாயகம் மற்றும் அவரது கணவர்

திரு ஜெயராம் ஆகியோர் முயற்சியில் புதிய சத்திய ஞான சபை கட்டுமானப் பணி.

மானாமதுரை அருகே 2 கி.மீ.தூரத்தில் மூங்கில் ஊரணி என்ற கிராமம் உள்ளது. அங்கு திருமதி திருவம்மா என்ற ஒரு அன்பர் உள்ளார். ஆரம்ப காலத்தில் அவர் ஒரு கிறிஸ்துவராக இருந்தார். கணவர் சொந்த நிலங்களில் விவசாய வேலை செய்பவர். திருமணம் செய்து ஐந்து ஆறு குழந்தைகள் வரை பிறந்து பிறந்து இறந்து போய்க் கொண்டே இருந்தன. எதனால் இவ்வாறு குழந்தைகள் இறந்து போகின்றன என்பதையே புரிந்து கொள்ள அவரால் இயல வில்லை.

ஒருநாள் ஒரு பெரியவர் வந்து இனிமேல் வடலூர் சென்று, வள்ளலார் வழியில் நீ வாழ்ந்தாயானால், உனக்குக் குழந்தை பாக்கியம் உண்டு. எவ்விதப் பிரச்னையும் இருக்காது எனச் சொல்லிச் சென்றார். திருமதி திருவம்மாவுக்கு மனதிற்குள் ஒரே போராட்டம். தான் சார்ந்திருப்பது கிறிஸ்துவ மதம். ஆனால் வந்த பெரியவர், வள்ளலார் சொல்லிய நெறியில் வாழச் சொல்கிறாரே என்பது குறித்து.

துணிந்து, தன் கணவரிடம் சொல்லி விட்டு, வடலூர் சென்றார். அங்கு ராமநாதபுரம் மாவட்டத் தங்கள் மனையில் தங்கினார். சத்திய ஞான சபை தரிசனம் கண்டார். வள்ளலார் யுனிவெர்சல் மிஷன் ட்ரஸ்ட் தலைவராக இருந்த திரு ஜோதிமுருகனிடம் அறிவுரைகள் பெற்றார். கொல்லா நெறியைக் கடைப் பிடித்தார். ஜீவகாருண்ய வழிகளில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்.

அதற்குப் பின் பிறந்தது ஒரு பெண் குழந்தை. அதற்கு காளீஸ்வரி என்று பெயரிட்டார். திரு அருட்பா படிப்பதிலும், அன்னதானம் செய்வதிலும் தீவிர ஈடுபாடு காண்பித்தார். வருடந்தோறும் பூச நாட்களில் வடலூர் சென்று வருவார்.

அவரது மகளுக்கு திருமணம் ஆகி, ஜோதிப் பிரியா என்ற ஒரு பெண் குழந்தைக்குத் தாயாகவும் ஆகிவிட்டது.

வள்ளலாரின் வழிக்கு வந்த பின்னர்தான், தனது வாழ்வில் ஓரளவுக்கு வசதிகள் வந்ததாக அவர் சொன்னார்.

வள்ளல் பெருமானின் வழியில் அவர் தமது வாழ்க்கையினைச் செலுத்திக்

கொண்டுள்ளார். அவரது குடும்பத்தினரின் புகைப்படம் கீழே தரப்பட்டுள்ளது.

தனக்கு சுத்த சன்மார்க்கத்தில் இருந்த தீவிர ஈடுபாடு காரணமாகவும், திருமதி திருவம்மாவின்

அனுசரணையான சன்மார்க்க நடவடிக்கைகளினால், மானாமதுரையில் வசிக்கும் திருமதி

ஜெய வள்ளி நாயகம் க/பெ திரு ஜெயராம், மூங்கில் ஊரணியில், இவரது வீட்டுக்கு

அருகாமையிலேயே ஒரு சத்திய ஞான சபையினைக் கட்டி வருகின்றார்.

-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0-0

அந்த ஊரில் உள்ள மக்களை எல்லாம்,, சுத்த சன்மார்க்க நெறிக்கு இவ்விருவரும் கொண்டு வருவதற்குப்

பெருமுயற்சி மேற் கொண்டிருக்கின்றனர்.

இதற்கும் ஒரு படி மேலாக, அந்த ஊரில் ஒரு சுத்த சன்மார்க்க விழிப்புணர்வு முகாமும் நடத்தினர்

மதுரையில் இருந்து வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி மூலமாக

இந்த விழிப்புணர்வு முகாம் கடந்த 20.6.2009 அன்று மிகச் சிறப்புற நடைபெற்றது.

.

மூங்கில் ஊரணி மக்கள் சன்மார்க்கச் சொற்பொழிவினைக் கேட்டு இன்புறுகின்றனர்.

அருட்பெருஞ் ஜோதீ அகவல் பாராயணம் நடைபெறுகின்றது.

திருமதி ஜெய வள்ளி நாயகம், திரு ஜெயராம், அவரது மகன் தயாமணி மற்றும் உறவினார்களுடன் உள்ளார்.

இறுதியில் இந் நிகழ்ச்சீயில் கலந்து கொண்ட அன்பர்களுக்கும், மற்றும் ஏழை எளியோருக்கும், அன்ன வினியோகம் செய்யப்பட்டது.








P Sujatha
கருணைமிகு திருமதி.திருவம்மா அவர்களுக்கு,
அம்மா,நீங்கள் வள்ளலாரின் சன்மார்க்க வழிக்கு வந்தது மகிழ்ச்சியான செய்தி.
வள்ளலாரின் சன்மார்க்கம் நம் வாழ்வில் எல்லாவற்றையும் சொல்லி தரும்.
வள்ளலாரின் சன்மார்க்க பாதையை செலக்ட் பண்ணியவர்களுக்கு கடவுள் உள் இருந்து வழி காட்டுவார்.நாளைய உலகம் சன்மார்க்க அன்பர்களின் கைல தான்.
Saturday, July 25, 2009 at 02:06 am by P Sujatha