சிவகங்கை அருகே முத்துப்பட்டி கிராமத்தில் சன்மார்க்க சங்கம்.
சிவகங்கை ஒரு மாவட்டத் தலைமை இடம் ஆகும். அங்கு, சமீப காலமாக (சுமார் 3 ஆண்டுகளாக) சாது திரு விஜயகுமார் மற்றும் அன்பர் திரு காளிதாஸ் ஆகியோரின் தொடர்ந்த முயற்சியாலும், சிவகங்கை மக்களின் ஆதரவாலும், சன்மார்க்க சங்கம் தொடங்கி நடந்து வருகின்றது.
அன்றாடம் தவறாமல் ஜீவகாருண்யப் பணியாக, பசித்த ஏழை எளியோருக்கு உணவளிக்கும் பணியினை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை அருகே, (சிவகங்கையில் இருந்து மதுரை செல்லும் வழியில்) சுமார் 3 கி.மீ. தூரத்தில், முத்துப்பட்டி என்ற ஒரு சிறு கிராமம் உள்ளது. அங்கு, தனக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு ஓட்டுச் சாய்ப்பு ஏற்படுத்தி, திரு பிச்சையா என்ற பெரியவர் (வயது 68), ஜீவகாருண்ய ஒழுக்கம் - அன்னதான வினியோகம் செய்து வருகிறார்.
மெயின் ரோட்டில், வள்ளலார் ப்ளெக்ஸ் பேனர் நட்டு, வரும் ஏழை எளியோருக்கு, மதியம் அன்னதானம் செய்து வருகின்றார். இவர் தனது மனைவி மற்றும் மற்றொரு அன்பர் ஆகியோர் சகிதம் இந்த ஓட்டுச் சாய்ப்பில் இருந்து கொண்டு இப் பணியினை செய்து வருகின்றார்.
திரு அருட்பிரகாச வள்ளலாரின் கொள்கைகளில் பிடிப்புக் கொண்ட இவர், முதலில் முத்துப்பட்டி குடியிருப்பில் தான் வசித்து வந்துள்ளார். பின்னர், ஊர் மக்கள், இவர் கொண்ட கொள்கைகளை ஏளனம் செய்வதால், தனது சொந்த இடத்திலேயே, ஓட்டுச் சாய்ப்பு ஏற்படுத்தி இந்தப் பணியினைப் புரிந்து வருகின்றார்.
அதற்கு அருகிலேயே சிவகங்கையில் இருந்த - காலம் சென்ற தனது குருநாதரின் சமாதியையும் வைத்துப் பராமரித்து வருகிறார்.
முதலில் ஏளனம் செய்த உள்ளூர் மக்கள் தற்போது, இவரது சேவையினைப் பார்த்து விட்டு, இவர் துவங்கிய சத்திய சன்மார்க்க சபையே சிறந்தது என உணர ஆரம்பித்து, இவருக்கு உதவி ஒத்தாசைகளும் செய்ய ஆரம்பித்துள்ளனர். இதுவே சுத்த சன்மார்க்க நெறிக்குக் கிடைத்த வெற்றி என இவர் உணர்கின்றார்.
இவரது ஈடுபாட்டின் காரணமாக, சமீபத்தில் சத்திய தருமச் சாலை, சிவகங்கையில் மெளன சித்தர் அருள் பீடத்தில் துவங்கப்பட்டபோது, இவரையே சுத்த சன்மார்க்கக் கொடியினை ஏற்றும் வாய்ப்பினை அன்பர்கள் இவருக்கு நல்கினர். கொடிவணக்கத்துடன் அவ்விழா துவங்கிய பின் ஏனைய நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன.
இவரது மகன் தவமணி @ கருப்பையா. மருமகள் பெயர் திருமதி வசந்தா. 3 குழந்தைகளுடன் அவர்களும், திரு பிச்சை ஐயாவின் பணிகளுக்கு உறுதுணையாக உள்ளனர்.
சிவகங்கை Dt.முத்துப்பட்டியில் சன்மார்க்க சங்கம்.
வணக்கம். அய்யா,உங்களின் சன்மார்க்க பிடிப்பை உணராது பலர் கேலி செய்து இருந்தாலும் சன்மார்க்க கொடியை உங்கள் கையால் ஏற்றி வைக்க ஆண்டவர் திருஉள்ளம் புரிந்தது உங்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி தான்.உங்களை போன்ற பெரியோர்களுக்கு வரும் அவமான சூழ்நிலைகளை எல்லாம் வெகுமான
சூழ்நிலைகளாக மாற்றி அமைத்து கடவுள் உயர்ந்த நிலைக்கு ஏற்றி வைப்பார்.