DAEIOU - தயவு
27.6.2009-மாணிக்கவாசகர் ஆனி மகத் திருவிழா-திருவாதவூரில் நடைபெற்றது.

மாணிக்கவாகர் பிறந்த திருவாதவூரில் ஆனி மகத் திருவிழா.

நாள் 27.6.2009.

தினமலர் 28.6.2009 நாளிதழில் வெளி வந்த செய்தி.

=================================================================================================

ஆங்கிலத் தமிழறிஞரான ஜி.யு. போப், மாணிக்கவாசகருக்கு, 1934-ல், திருவாதவூரில் நினைவுக் கோயில் அமைத்தார். 70 ஆண்டுகளுக்குப் பிறகு, 2005ல் அக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

ஆண்டுதோறும், அருள்மிகு திருமறை நாதர் வேதநாயகி அம்மன் கோயிலில் இருந்து மாணிக்கவாசகர் புறப்பாடாகி, அவர் பிறந்த இடத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். நேற்று, கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் நடைபெற்றது. ஆன்மீகச் சொற்பொழிவும், அன்னதானமும் நடைபெற்றது.

=============================================================================

மதுரை மாவட்டத்தில் மேலூர் தாலுகாவைச் சேர்ந்த திருவாதவூர், ஒரு சிறிய பஞ்சாயத்து ஆகும். இங்கு, மாணிக்கவாசகர் பிறந்தார். அவர் பாடிய திருவாசகத்தை வள்ளல் பெருமான் எந்நாளும் பாடி வந்தார்.

அவருக்கு தமக்கையார் மகளான தனக்கோடி என்பவரை அவர் தனது உற்றோர், மற்றையோரின் வற்புறுத்தலுக் கிணங்கத் திருமணம் செய்து கொண்டார் என்பதையும், அவர், திருமண நாளன்று இரவில், திருவாசகத்தைத் தோத்திரம் செய்தார் என்பது, சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் அறிந்த செய்தி ஆகும்.

உரைநடைப் பகுதியில் வள்ளல் பெருமான், திருவாசகத்தின் மகிமையை உணர்த்தியுள்ளார்.

அவர் மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டியன் அரசவையில் தலைமை மந்திரி பதவியினை வகித்தவர். வாதவூரர் எனப் பெற்றோரால் பெயரிடப்பட்ட அவருக்கு, பாண்டிய மன்னன், தென்னவன் பிரமராயன் என்று பெயரிட்டான். அவர் மந்திரி பதவி வகித்த காலங்களில், தமிழகத்தினை ஆண்ட, மூவேந்தர்களுக்குள் மிகுந்த ஒற்றுமை உணர்வு நிலவி உள்ளது. மக்கள் சுபிக்ஷமாக வாழ்ந்துள்ளனர்.

அவர் பிறந்த ஊரான, திருவாதவூரில்,. அருள் மிகு திருமறை நாதசுவாமி திருக்கோயில் உள்ளது. கி.பி. 3ம் நூற்றாண்டில் அக் கோவில் கட்டப்பெற்று,.கம்பீரமாகக் காட்சி அளிக்கிறது.

அக் கோவிலிலிருந்து நடை தூரத்தில், மாணிக்க வாசகப் பெருமான் பிறந்த இடத்தில்,. திருக்கோவில் கட்டப்பட்டு, உள்ளது. அந்தத் திருக்கோவிலில் தான், 27.6.2009 அன்று, ஆனி மகத் திருவிழா நடைபெற்றுள்ளது.

அன்பர்கள் தினமலர் செய்தியினை கவனிக்க வேண்டப்படுகிறது. மாணிக்க வாசகருக்கு, ஆலயம் எழுப்பியது, வெளி நாட்டிலிருந்து இங்கு வந்து தமிழ் பயின்று, அதிலேயே லயித்த திரு ஜி.யு. போப் என்பவரால் என்று அச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

உலகின் எங்கோ ஒரு மூலையில் பிறந்து, இந்தியாவிற்கு வந்து, இறை மொழியாம் நந்தமிழ் மொழியால் பற்றுக் கொண்ட திரு ஜி.யு.போப் அவர்களால், மாணிக்கவாசகப் பெருமானுக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. பாண்டிய நாட்டிற்கே சிறப்பு வாய்ந்த மந்திரியாக இருந்த மாணிக்கவாசகப் பெருமானுக்கு, உள்ளூர் மக்கள் மேற்கொள்ளாத பணியை, திரு ஜி.யு.போப் அவர்கள் மேற்கொண்டுள்ளார்கள் என்பது, தினமலர் செய்தியால் தெரியவருகின்றது.

இது, எவ்வளவு சிறப்பு. ஆன்மீகம், மொழி. மதம், நாடு, இனம் எல்லாவற்றையும் தாண்டியது என்பதற்கு இதுவே ஒரு சான்று ஆகும்.



















gomathyperumal
Karunaimigu Ramanujam Sir,
Thank U information about Manikavasakaperuman's Special News.
By,Nagercoil Aruljothi Sanmarga Students.
Sunday, June 28, 2009 at 06:20 am by gomathyperumal