DAEIOU - தயவு
மஹாராஷ்ட்ராவில் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறி பரவல்.

மஹாராஷ்ட்ராவில் வள்ளற் பெருமானின் நெறி பரவல்.

11.6.2009 (வியாழன்) அன்று மாலை 6.00 மணி அளவில், "சக்தி ஸ்பிரிச்சுவல்" (Shakti Spiritual) சமதா ஷா கூப்பிடுகின்றேன் என ஒரு குரல் செல் போனில் ஒலித்தது.

வள்ளலார் என்பவர் யார் ? அவர் சொன்ன நெறி எத்தகையது ? அதனை எப்படிப் பரப்புகின்றீர்கள் என விவரம் கேட்டார்கள்.

மதுரையில் வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன் நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. வள்ளலார் காண்பித்த நெறியில் ஜீவகாருண்ய ஒழுக்கம் இங்கே உள்ள மக்களுக்குப் பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றோம். வாராந்திர வழிபாடு நடைபெறுகின்றது. அன்பர்களுக்கு, சுத்த சன்மார்க்க நெறியினை போதிக்கும் பணியும் ஜீவகாருண்யப் பணியும் இங்கே நடைபெறுகின்றது என பதில் சொல்லப்பட்டது.

அது தவிர, www.vallalar.org மற்றும் www.vallalarspace.com ஆகிய 2 இணைய தளங்கள் மூலம், வள்ளலாரின் நெறிகள் உலகம் முழுவதும் பரப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றன.

நீங்கள் யார் எனக் கேட்டதும் SHAKTI SPIRITUAL, PUNE-யிலிருந்து பேசுகின்றோம் என்ற பதில் கிடைத்தது. அப்படியானால், நீங்கள் இலகுவாக வள்ளலாரின் வாழ்க்கை வரலாறு, மற்றும் அவரது கொள்கைகள் குறித்துத் தெரிந்து கொள்ள ஏதுவாக, ஆங்கிலத்தில் எழுதப்பட்ட புத்தகம் அனுப்பி வைக்கலாம் என பதில் தெரிவிக்கப்பட்டது.

வள்ளலாரின் நெறி என்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளோம் நாங்கள், மஹாராஷ்ட்ரா மாநிலம், புனேயில் உள்ள முக்கந் நகரிலிருந்து பேசுகின்றோம் என்றனர்.

அது, யோகா, தியானம் முதலானவைகளை பயிற்றுவிக்கும் ஒரு நிறுவனம் போல் தெரிகின்றது.

உடனே வள்ளற் பெருமானின் வாழ்க்கை வரலாறு, மற்றும் அவர் பயிற்றுவித்த சுத்த சன்மார்க்கப் பெரு நெறி குறித்து, திண்டுக்கல் சுவாமி சரவணானந்தா அவர்கள் எழுதிய SAINT RAMALINGA என்ற ஆங்கில நூலையும், அவரது படம் (Flex Banner) மற்றும் சிறு சிறு ஸ்டிக்கர் படம், முதலானவை கூரியர் சர்வீஸில் 11.6.2009 அன்று அந் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப் பட்டது.

இன்று (15.6.2009) மாலை 4.00 மணி அளவில், அங்கிருந்து பேசினார்கள்,. நீங்கள் அனுப்பிய செயிண்ட் ராமலிங்கா புத்தகம், அவரது படம் உள்ள ப்ளெக்ஸ் பேனர் மற்றும் சிறு சிறு படங்கள், ஸ்டிக்கர் தங்களிடமிருந்து கிடைத்தன. அந்தப் புத்தகத்தைத்தான் படித்துக் கொண்டிருக்கின்றேன் என அந்த நிறுவனத்தலைவர் தெரிவித்தார்.

வள்ளற் பெருமானின் நெறியினை, நீங்கள், தயவு செய்து மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், உங்களது நிறுவனத்தின் மூலம் அனைவருக்கும் தெரிவியுங்கள். எல்லா உயிர்களிடமும் இரக்கம் காண்பித்து ஜீவகாருண்யப் பணி செய்வதுவே வள்ளற் பெருமானின் போதனை. இலகுவான ஒரு நெறி என அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

அவர் மூலமாக மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரவுவதற்கு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டுவோம்.