பழனி தாலுகா கீரனூர் சன்மார்க்க குருகுல நிறுவனர் திரு குலபதி குப்புசாமி அய்யா....கடந்து வந்த பாதை.
பழனி தாலுகாவில் பழனியிலிருந்து சுமார் 20 கி.மீ.தூரத்தில் கீரனூர் என்ற ஒரு கிராமம் உள்ளது. இது டவுன் பஞ்சாயத்து ஆகும். இங்கு பொதுவாக அனைத்து மக்களும் வசித்தாலும், முஸ்லீம்களும், தாழ்த்தப்பட்ட இனத்தவரும், அதிக அளவில் வசிக்கின்றனர்.
இங்கு கடந்த 59 ஆண்டுகளாக, வள்ளலார் நெறியில் சன்மார்க்க குருகுலம் ஒன்று இயங்கி வருகின்றது. கடந்த 1.6.2009 முதல் 7.6.2009 வரை இந்த குருகுலத்தில் விழா நடைபெற்றது. குறிப்பாக 6.6.2009 (சனி) மற்றும் 7.6.2009 (ஞாயிறு) ஆகிய நாட்களில், இங்கு சன்மார்க்க குருகுலத்தின் 59-ஆம் ஆண்டு பெரு விழா நடத்தப்பட்டது.
இந் நிறுவனத்தின் ஸ்தாபகர் திரு குலபதி குப்புசாமி ஐயா அவர்கள். அவருக்கு தற்போது சுமார் 96 வயதாகிறது. புனித வைணவ சமய மரபில் பிறந்தவர். தாயார் பெயர் அங்குத் தாயார். தந்தை அழகர் சுவாமி. தனது 5-வது வயதில், நாயுடு சமூகத்தைச் சேர்ந்த திண்ணைப்பள்ளி ஆசிரியர் ஸ்ரீ ஐயாசாமி நாயுடு அவர்கள் மூலம் அப் பள்ளியின் தரையில் மண்ணில் அகர அக்ஷரத்திலிருந்து எழுத்துக்களை எழுதிப் பழகியுள்ளார். பழகிய பின்னர், ஓலைச் சுவடியில் எழுதப் பயிற்சி தந்துள்ளனர்.
பின்னர் கீரனூரில் இஸ்லாமிய சமூகத்திலுள்ள மஸ்ஜிது மதரஸா பரிபாலன சபை நிர்வாகத்தின் கீழ் நடந்த உயர் ஆரம்பப் பள்ளியில் 3-ஆம் வகுப்பில் சேர்க்கப்பட்டு, காகிதப் புத்தகங்கள் மூலம் பயின்றுள்ளார். இப் பள்ளியில் இந்து, இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் கற்றுள்ளனர். இந்த இஸ்லாமியப் பள்ளியில் விருப்பப் பாடமாக புனித திருக்குர்ரான் ஷரீபை, அதாவது இஸ்லாமிய வேத சாஸ்திரத்தை (அரபி மொழியில் உள்ளது) அனைத்து மதத்தினரும் கற்பிக்க உத்திரவிடப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியில், தமிழ், சரித்திரம், கணக்கு முதலிய அரசு அங்கீகாரப் பாடங்களுடன். விருப்பப் பாடமாக திருக்குர்ரான் மறையையும் வைத்திருந்தார்கள். எனவே, ஆரம்பத்திலிருந்து அரபி மொழியை எழுதவும், படிக்கவும் இவர் பயின்றுள்ளார். 8வது வகுப்பு வரை கல்வி கற்றார்.
ஏழ்மைக் குடும்பம் ஆகையால், உயர்நிலைக் கல்வி பயில வாய்ப்பு ஏற்படவில்லை. மாதம் ரூ. 10/- சம்பளத்தில் மளிகைக் கடையில் வேலை பார்த்துள்ளார். 19-வயதளவில் திருமணம் நடந்தது. இஸ்லாமியப் பள்ளியில் பயின்ற காலத்தில் கிடைத்த படிப்பினைகள் தினசரி வாழ்வில் (தினசரி பிரார்த்தனை), இறை வழிபாடு, மறை ஓதுதல், குரு நெறியில் நிற்றல் போன்ற பழக்கங்கள் ஏற்பட்டு, இவர் மனத்தில் இவை ஆழமாகப் பதிந்து விட்டன.
இந் நேரத்தில் “மனித வாழ்க்கையும், காந்தியடிகளும்” என்ற, தமிழ்த் தென்றல் திரு வி. கல்யாண சுந்தரனாரின் உரைநடை நூலினை இவர் படிக்க நேர்ந்தது. அதுவே இவரது எதிர்கால வாழ்விற்கு வழியும், ஒளியுமாக அமைந்துள்ளது. அந் நூலை திரும்பத் திரும்ப படித்ததில், திரு இராமலிங்க அடிகள் அருளிய திருவருட்பாவின் பாமலர்கள் பல இடங்களில் மேற்கோளாக இடம்பெற்றிருந்ததை இவர் கண்டுள்ளார்.. அவற்றை நோட்டில் எழுதி வைத்து, முடிந்த போதெல்லாம் பாடிப் படித்துள்ளார். தொடர்ந்து திரு வி.க அவர்களின் “பெண்ணின் பெருமை” என்ற நூல் அவரைச் சிந்திக்கத் தூண்டியுள்ளது. இதனிடையே திருப்புகழ், பட்டினத்தார் பாடல், திருவருட்பா, நந்தனார் வரலாறு போன்ற ஞானிகளின் பாடல்களை அவ்வப்போது பாடிப்படித்து உணர முடிந்தது.
ஒரு முறை, மதுரையில் நடந்தேறிய அருள் ஞான சித்தர் பெருமானாகிய வள்ளலாகிய, அருட்ஜோதி இராமலிங்கரின் அவதார விழா மற்றும் அன்னதான விழா, ஊர்வலம் முதலியவை குறித்துக் கேள்விப்பட்டுள்ளார். அதன் பின்னர், வள்ளல் பெருமானின் புகைப்படம் கிடைத்தது. இதன் பின்னர், இவரது குடியிருப்பு ஜோதி குடில் போல் ஆனது. அங்கு மாதா மாதம் முழு நிலவு நாளில் இயன்ற அளவிற்கு, அன்னதானமும் பிரார்த்தனை (ஞான தானமும்) நடந்துள்ளன. இது, இவரது உறவினர்களுக்கு புதுமையாக இருந்துள்ளது.
http://www.vallalarfiles.com/image/P0uXNQ1mGFrqfnmQXXXL1A,$,3d,$,3d/sz-tn650/090620091136260000.jpg
சுற்றியிருந்த அன்பர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு சன்மார்க்க சங்கம் 1943ஆம் ஆண்டு வாக்கில் நாயுடுமார்களின் தெருவில் துவங்கியுள்ளது. இங்கு நித்திய பிரார்த்தனை, வாரப் பிரார்த்தனையுடன் மாதாந்திர முழு நிலவு இலக்கிய விழா, சிறு அன்னதானமும் நிறைவேறின. இதற்கான சன்மார்க்க பிரசுரங்கள் வெளியிடப்பட்ட பிறகு, மெல்ல மெல்ல பலர் வந்து பங்கேற்றனர்.
இதனைப் பார்த்துக்க் கொண்டிருந்த ஒரு சிலர், இவர், புனதமான வைஷ்ணவ நெறிக்கு எதிரான செயல் செய்கின்றார் என்று சங்கக் காரியங்களுக்கு தடையும், இடையூறும் செய்து இழிவாகப் பேசி, இவரையும், பெற்றோர் மனத்தையும் புண்படச் செய்து வந்துள்ளனர். தாராபுரத்திற்கு அருகிலுள்ள வரண்பாளையத்துக்கு தவத்திரு மெளனானந்த சுவாமிகள் வருகை தந்தருளி, அருளாசி வழங்கி, இந்தச் சங்கம் வாயிலாக இவர் தோன்றிய மரபான வைஷணவ சமயத்திற்குப் பெருமை சேர்க்கும் புண்ணிய காரியம் செய்துள்ளார் என்று சொன்னார். அதன் பின்னர், நாயுடு சமூகத்தினர், பிள்ளைமார் சங்கத்தினர், இஸ்லாம் சமூகத்தினர் ஆகியோர், உதவிக்கரம் நீட்டினர்.
http://www.vallalarfiles.com/image/lgsYM6,$,2fhByqM8,$,2f,$,2flcOkMVA,$,3d,$,3d/sz-tn650/090620091136300000.jpg
வாடகை இடத்தைக் காலி செய்து விட்டு, திருமதி லிங்கம்மாள் அவரும் அவரது கணவர் (லேட்) செட்டுமை வெங்கிடுசாமி நாயுடு அவர்களும் 3 சென்ட் காலி மனையை உபயமாக வழங்கினர். இந்தத் திருப்பணிகளைச் செயல்படுத்தி இவரது பிரார்த்தனைக்கு நிழல் கொடுத்தருளிய பெருமையும் இனிய அருட்பா அமுதத்தினைப் பாடவும், அருள் நெறியால் சன்மர்க்க இயக்கத்தை பரவிடச் செய்த பெருமையும் உடுமலை, தாராபுரம், சென்னை, மதுரை, கோவை மாவட்டங்களிலிருந்து அருளிய தர்ம சீலர்களான சன்மார்க்க சான்றோர் பெருமக்களைச் சாரும். அதன் பின் கீரனூரிலிருக்கும் சத் சங்கமானது, விரிவடைந்து நித்திய அன்னதான. ஞான தான. கல்வி தானச் சாலையாக உருவாகியது. இதன் பின்னர் ஒவ்வொரு ஆண்டு விழாக்களிலும், பெருமான் அவதார விழாக்களிலும், தர்மம் கொடுத்து காத்தவர்கள் ஸ்ரீ பாலசுப்பிரமனியம் சுலோச்சனா அம்மாள் குடும்பம்.
இரவும் பகலும் பாராது இறைத் தொண்டிற்கே இவரது வாழ்நாள் செலவிடப்பட்டது. 1951 ஆம் ஆண்டில் ஒரு குருகுலம் அன்பர்களின் பேராதரவால் துவக்கப்பட்டது.
http://www.vallalarfiles.com/image/WwxYrgjVsyxfbFe0jOpYlg,$,3d,$,3d/sz-tn650/090620091136320000.jpg
http://www.vallalarfiles.com/image/bqYSIaUdIi3PBxFNMKNrmA,$,3d,$,3d/sz-tn650/090620091136340000.jpg
ஒரு கால கட்டத்தில், இவர் வேட்டைக்காரன் புதூர் சன்மர்க்க விழாவிற்கு அறவுரைப் பணிக்குச் சென்றிருந்த நேரத்தில், அரசுக்குப் பொது மக்களால் எழுதப்பெற்ற புகார் மூலம் தமது சொந்த நலனுக்காக குருகுலம் என்ற பெயரை வைத்து சர்க்கார் நிலத்தை இவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்ற குறைக்கு ஆளாக்கினர். தர்மச்சாலை குடிசை பறிபோய், 20 குழந்தைகளும் பணியாளர்களும் நிர்க்கதிக்கு ஆளாயினர்.
இந்த சோக நிலையைக் கண்ட உள்ளூர் தர்ம பிரபுவான ஜனாப் சி. ஏ. வி. அப்துல் வகாபு இராவுத்தர், கடந்த 3 ஆண்டுகளாக, பள்ளிப் பணி, அனாதை விடுதிப் பணி ஆகியவற்றை இவர் நடத்துவதைக் கேட்டறிந்து, தனது நந்தவனச் சோலையை உடனேயே அடைக்கலம் கொடுத்து பணி தொடர ஆதரவளித்துள்ளார். “ஆதரவற்ற அனாதைகட்கு உதவுவோர் உலகமழியும் நாள் வரை சொர்க்கத்தில் என்னுடன் இருப்பார்கள்” என்று திருக்குர்ரான் வேதமான இஸ்லாமிய திருமறை அருளிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அருள் மொழி உள்ளதை எண்ணி இந்தப் பேரதிசயத்தை, எல்லாம் வல்ல இறைவனன அருட்பெருஞ்ஜோதி செயல்படுத்தி, குருகுலத்திற்கு உயிர்ப்பிச்சை கொடுத்துள்ளார். இந்தச் செயலுக்குக் காரணாமாக இருந்த தீன் குலத்தையும், திக்கற்ற அனாதைகளைக் காக்கும்படி தூண்டுதலை வழங்கிய புனித திருக்குர்ரான் மறையையும் நாம் எப்படிப் போற்றாமல் இருக்க முடியும். எம்மத நிலையும் நின்னருள் நிலையில் இலங்குதல் அறிந்தன எல்லாம் சன் மதமாகக் கொள்கின்றேன் என்ற திருஅருட்பா வாசகம் நினைவில் கொள்ளப்பட்டது.
அந்த இடத்தில் தென்னை, கொய்யா, மா. மாதுளை ஆகிய மரங்களும் சூழ்ந்து, அமைதி தவழும் இடத்தில் குருகுலம் நடக்கின்றது. வருவாய்க்குரிய சிறு சிறு கிராமியக் குடிசை தொழில்களான மாவரைக்கும் ஆலை, சலவை சோப்பு தயாரிக்கும் கூடம் மற்றும் ஏழை மகளிருக்கான தையற் பயிற்சி மையம் ஆகியவற்றைச் சிறிது சிறிதாகத் தொடங்கி, குழந்தகள் தங்கிடக் குடில் கட்டிடமாகி, ஏறக்குறிய 25ஆம் ஆண்டு வெள்ளி விழாவை அனைவரும் காணச் செய்து அருள் பாலித்தது. 1976 முதல் 1990 வரை விதி வசத்தால் மனித நேயம் அல்லாத மனத்தவர்களால் இவருக்கு எண்ணிலடங்கா சோதனையும் துன்பமும் துயரமும் ஏற்பட்டன. கள்வன் என இவர் நீதிமன்றத்தில் நிறுத்தப் பட்டுள்ளார். சத்தியமும் தர்மமும் இவரைக் காப்பாற்றி உள்ளன. உயிர் ஆறு காலத் தொழுகை தியானத்திற்கும், உடல் ஆத்மாலயங்களின் தர்ம சேவைக்கும் பயன்படுத்தப்பட்டன. இதற்கு மூலாதாரமாக இருந்தது தெய்வ திருவருட்பா திருமறையே ஆகும்.
http://www.vallalarfiles.com/image/bqYSIaUdIi3PBxFNMKNrmA,$,3d,$,3d/sz-tn650/090620091136340000.jpg
http://www.vallalarfiles.com/image/rvLHQSpKdlnRculQwg8E8Q,$,3d,$,3d/sz-tn650/090620091136360000.jpg
http://www.vallalarfiles.com/image/SmXXjgwQbFRI8vJ0ut7ITg,$,3d,$,3d/sz-tn650/090620091136380000.jpg
http://www.vallalarfiles.com/image/4HKoZmw6cv1VDXrUZi,$,2bnDg,$,3d,$,3d/sz-tn650/100620091136400000.jpg
இவ்வாறு கீரனூரில் பல சமய ஒருமைப்பாட்டுக்குரிய சமரசக் கோயிலான சத்திய ஞான சபை எழுந்தது.
எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருள் பாலிப்பும், அருள் கடவுளான இராமலிங்க வள்ளலாரின் மகா கிருபையும் கூடி குருகுலத்திற்கு 10 ஆண்டுகளுக்குப் பின் அதுவும் பல சோதனைகளுக்குப்பின் விடிவு காலம் ஏற்பட்டது.
அருட்பெருஞ்ஜோதி ஆற்றலால் 10 ஆண்டு காலத்தில் மண் குடிசை மாளிகையாகியது. சாதாரண ஓட்டுக் குடில், சத்திய ஞான சபையானது, திக்கற்றோர் குடில், சித்தி வளர்க்கும் குடிலானது. காலமெல்லாம் உலகைக் காணாது தவிப்போர்க்கு கண்ணொளியற்றோருக்கு கண்ணான வீடானது. வாழ்நாளெல்லாம், மனைவி, மக்கள், சுற்றம் ஆகியோருக்காக உழைத்து, உழைத்து ஓடாகி விட்ட முதியோருக்கான அடைக்கலம் தரும் இல்லமானது. கிரமங்களில் தன்னிலை இழந்து வறுமையால் வாடுவோருக்கு, கை, கால், உடல் ஊனமுற்றோர்க்கு, தொழு நோயாளர்களுக்குத் தாயில்லமாகியது. நாளும் அவர்களைத் தேடி அன்னம் வழங்கிப் பசித்துயர் நீக்கும் தர்மசாலையானது. இவ்வண்ணமாக இறைவடித்த ஓவியங்களான மனித ஆலயங்கள், மனித நேயமிழந்த இதயங்களால், தயவற்ற தன்னலவுணர்வால் புழுதியில் வீசப்படும் மனித மலர்களை பூஜை மலர்களாக்கிடும் கடினமான பணியைக் கர்ம யோகமாகக் கருதி உடுமலை, திருப்பூர், காங்கேயம், ஈரோடு, வெள்ளக் கோயில், கம்பம், கோவை, திண்டுக்கல், சென்னை, பல்லடம், சூலூர் ஆகிய இடங்களிலிருந்து உத்தமக் கொடை வள்ளல்கள் தமிழகத்தில் எண்ணற்ற நாளும் தேடி வந்து உதவி வருகின்றனர். அனைவரும் எக்காலமும் வாழும்படி இதன் நிறுவனர், திரு குலபதி அ.குப்புசாமி வேண்டுகின்றார்.
இந்த சன்மார்க்க குருகுலத்தால் நடத்தப்படும் நிறுவனங்கள்.
|
1.
|
அருள்ஜோதி திக்கற்றோர் சரணாலயம்.
|
|
2.
|
அருள்ஜோதி நடுநிலைக் கல்விச்சாலை
|
|
3.
|
அருள்ஜோதி முதியோர் குடில்
|
|
4.
|
அருள்ஜோதி கண்ணொளியற்றோர் காப்பகம்.
|
|
5.
|
அருள்ஜோதி கிராமிய தருமச்சாலை
|
|
7.
|
அருள்ஜோதி மருத்துவ மனை
|
|
8.
|
சத்திய ஞான சபை.
|
http://www.vallalarfiles.com/image/bnKmFIMR8gYsIUXnmPYE,$,2fA,$,3d,$,3d/sz-tn650/090620091136220000.jpg
பழனி தாலுகா கீரனூர் சன்மார்க்க குருகுல நிறுவனர் திரு குலபதி குப்புசாமி ஐயா...
வணக்கம்.கருணைமிகு.திரு.குலபதிகுப்புசாமி அவர்களின் நல்ல சன்மார்க்க வாழ்க்கை பாதையை வெளி இடுவதற்கு மிகவும் நன்றி.
Karunaimigu Friends,நல்ல சன்மார்க்க பணிகளை செய்வோருக்கு கஷ்டமான சூழ்நிலைகள் வரலாம்,
துன்ப நிலைகள் வரலாம்.ஆனால்,இத்தகைய பாதிப்புகள் அவர்களை ஒன்றும் செய்ய முடியாது.அவர்களின் சிறப்பை அருள்பெரும்ஜோதி வெளி கொண்டு வருவார்.
நல்ல சுத்த சன்மார்க்க பெரியோர்கள் மீது வம்பு,வழக்குகள் செய்தாலும் அவர்கள் பதிலாக நன்மைகள் செய்வதற்கு தான் துடிப்பார்கள்.நாம் கடை பிடிக்கும் சுத்த சன்மார்க்கம் உறுதியாக இருந்தால் தான் சுத்த சன்மார்கத்தை வழங்கிய வள்ளலார் பெருமானாருக்கு அது சிறப்பை கொடுக்கும்.நாம் நல்ல படியாக வாழ்வதற்கு தான் அருள்பெரும்ஜோதி ஆண்டவர் வள்ளலார் மூலமாக சுத்த சன்மார்கத்தை வழங்கி உள்ளார்.நாமும் வள்ளலார் போல மரணமிலா பெரு வாழ்க்கையை வாழ விரும்புகிறார் அருள்பெரும்ஜோதி.வள்ளலாரும் அதனை தான் விரும்புகிறார்.
எனவே,நாமும் சுத்தசன்மார்க்கத்தின் வாழ முயற்சிப்போம்.முடியா விட்டால் சன்மார்க்கத்தில் வாழ விரும்புவர்களை உற்சாக படுத்துவோம்.
திரு.ராமனுஜம் அவர்கள் சுத்த சன்மார்க்கத்தில் வாழுவது மட்டும் இல்லாமல் சுத்த சன்மார்க்க அன்பர்களை பற்றி வெளி இட்டு உற்சாக படுத்திருக்கிறார்.நன்றி ராமனுஜம் அய்யா.வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதி சுஜாதா.