DAEIOU - தயவு
ஸ்ரீ நந்த கோபால சாமி கோவில் மாட்டுத் தொழு,


ஸ்ரீ நந்த கோபால சாமி கோவில் மாட்டுத் தொழு,
கம்பம்.
கம்பம் நகரில் அமைந்துள்ளது ஸ்ரீ நந்த கோபால சாமி கோவில். இந்தக் கோவிலில் என்ன விசேஷம் என்றால், இங்கே மாட்டுத் தொழுவம் ஒன்று உள்ளது. மிகப் பெரிய மாட்டுத் தொழுவத்தின் நடுவில் ஒரு கல் தூண் (ஸ்தூபி) நடப்பட்டுள்ளது. பீடத்தின் மேல் கம்பீரமாகக் காட்சி அளிக்கும் அந்த கல் தூண் இங்கே பூஜிக்கப் படுகின்றது. அதற்கு முன்புறம் கீழே ஒரு ஜோதி எரிகின்றது. அதனைச் சுற்றிலும் மாடுகள், மூன்று புறமும் சாணம் இட்டுள்ளன. அதன் நடுவில் இந்தப் பீடம் அமைந்துள்ளது. சுற்றிலும் மாடுகளைக் கட்டி வைப்பார்கள். அவை இடும் சாணம் பயிர்களுக்கு உரமாகப் பயன் படுகின்றது.
கோவிலுக்கு வெளியில் வந்தால், அந்தக் காம்பவுண்டுக்குள் ஒரு மாடு தனியே கட்டப்பட்டுள்ளது. இக் கோவிலில் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்படும் மாடுகளுக்கு ஒரு தேர்வு உண்டு. பல கன்றுக் குட்டிகளையும் ஒரு இடத்தில் கூட்டி வைத்து, அவற்றிற்கு முன்பாக சற்றுத் தூரத்தில், வைத்து விடுவார்களாம். எந்தக் கன்றுக் குட்டி, அவ்விதம் கரும்புகளை முதலில் ஓடிப் போய்க் கடிக்கிறதோ, அந்தக் கன்றுக் குட்டி, இந்த ஆலயத்தின் பராமரிப்பில் வளர்க்கப்படுகின்றது.
இதில் என்ன விசேஷம் என்கிறீர்களா ?
அங்கே ஒரு விளம்பரப் பலகை..இந்த மாட்டுத் தொழுவத்தைப் பற்றி எழுதி வைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிரில் ஒரு மாடும் கட்டப் பட்டு, அதனைச் சுற்றிலும் மூங்கில் மரத்தால் ஆன தொழுவம் உள்ளது.
அவ்விதப் போட்டியில் ஏற்கனவே ஜெயித்த மாடு அன்று தனியே கட்டப்பட்டு இருந்தது.
அதற்கு எதிரே இருந்த போர்டில், மனிதன் அடைய வேண்டிய முக்கியமான கொள்கைகள் எழுதி வைக்கப்பட்டு இருந்தன. மனிதன் பிறப்பின் ரகசியத்தைப் பற்றியும் ஆன்மாவைப் பற்றியும், இந்தப் பிறப்பில் அடைய வேண்டிய முக்கிய லட்சியத்தைப் பற்றியும் அந்த போர்டில் குறித்து வைக்கப்பட்டிருந்தது.
இந்த இணையதளத்தின் வாசகர்களின் தகவலுக்காக, அந்த மாடும், அந்த போர்டும்





2 Comments
P Sujatha
Karunaimigu Ramanujam Sir,
Thank U For all Detailed Informations.
Thursday, June 11, 2009 at 11:18 am by P Sujatha
to.dbala
Good Story
Friday, June 12, 2009 at 04:37 am by to.dbala