DAEIOU - தயவு
சன்மார்க்கக் கூட்டம் தொகுத்தளிப்பாளர்கள்-கம்பம் சன்மார்க்க சங்கத்தினர்.

தமிழ் நாடு முழுவதும் சன்மார்க்க நிகழ்ச்சி சிறப்பாக நடத்தும்
நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள்,
சன்மார்க்க சங்கம், கம்பம்.
தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் பல்வேறு சன்மார்க்க சங்கங்கள் உள்ளன. அவற்றில், ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு கால கட்டத்தில், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அழைக்கப்படும் சிறப்பு அழைப்பாளர்கள், முக்கியஸ்தர்கள் அனைவரும் பேசவும் பாடவும் அவர்கள் பெயர்கள் இடம்பெற்ற பத்திரிக்கைகள் அடித்து, பல்வேறு இடங்களுக்கும், மாவட்டங்களுக்கும் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றது.
குறிப்பிட்ட சன்மார்க்க சங்கத்தில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி நடைபெறுகின்றதென்றால், அந்த சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கென்று பலப்பல பணிகள் காத்திருக்கும். ஒவ்வொருவரும் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டாலொழிய, குறித்த நாளில், அந்த விழா நடந்து முடிவடைவது மிகவும் கடினமான காரியமாகி விடும்.
இது ஒரு புறமிருக்க, ஒவ்வொரு நிகழ்ச்சியும் நடந்த பின் அந்தந்த நிகழ்ச்சி குறித்து வர்ணனை செய்வது, நிகழ்ச்சியினைத் தொகுத்துக் கோர்வையாக அரங்கினில் தொய்வின்றி நடத்திச் செல்வது என்பது அனுபவம் வாய்ந்தவர்களைத் தவிர ஏனயோரால் இயலாது. ஊடே ஊடே சன்மார்க்கக் கருத்துக்கள், சொல்லுதல், பல்வேறு ஆன்மீக நூல்களில் இருந்து எடுத்துக் காட்டுகள் சொல்லுதல் இவற்றிற்கெல்லாம், முன் அனுபவம் தேவை. பல நூல்களையும் படித்தும் இருக்க வேண்டுவதும் அவசியம் ஆகும். மிக மிக முக்கியமாக, திரு அருட்பாவில் நல்ல தோய்வு வேண்டும். திரு அருட்பாவினை இசையுடன் பாடவும் வேண்டும்.
அத்தகைய விழாக்களில் நல்ல விதமாக, சன்மார்க்கக் கருத்துக்கள், திருஅருட்பாப் பாடல்கள் முதலானவற்றை மிகச் சிறப்பாக அடுத்து அடுத்துச் சொல்லி, நிகழ்ச்சிகளை தொடர் கோர்வையாகவும் திறமையாகவும், அதே சமயம் அரங்கினில் அமர்ந்திருக்கும் பார்வையாளர்களுக்கும் இலகுவாகப் புரியும் வண்ணமும் விழா நிகழ்ச்சிகளை நடத்திச் செல்ல வேண்டும்.
இப் பணியினை, பல விழாக்களிலும் மிகச் சிறப்பாக கம்பம் சன்மார்க்க சங்கத்தைச் சேர்ந்த திரு சுருளி ராஜ், திரு ஜெயப்பிரகாஷ்,B.Sc., B.L.,(அன்னஞ்சி), மற்றும் திரு பொம்மைய சாமி ஆகியோர் மிகத் திறம்படச் செய்து வருகின்றனர்., வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்கக் கருத்துக்களையும், திரு அருட்பா பாடல்களையும், இந்த மாநிலம் முழுவதிலும், பல்வேறு சன்மார்க்க சங்க நிகழ்ச்சிகளிலும் அந்தந்த சன்மார்க்க சங்கத்தவர்கள் கேட்டுக் கொள்வதன் பேரில் அங்கெல்லாம் சென்று, கலந்து கொண்டு, தொகுத்து அளிப்பதில் (Commentator) இவர்கள் வல்லவர்களாக உள்ளனர்
தமிழ் நாட்டின் எந்தப் பகுதியில் சுத்த சன்மார்க்க நிகழ்ச்சி நடைபெற்றாலும், இவர்கள் அங்கு தவறாமல் ஆஜராகி, மக்களுக்கு, சுத்த சன்மார்க்கக் கருத்துக்களை, தங்களது அருமையான இசையுடன் அமைந்த திருவருட்பா பாடல்கள், மற்றும் தொகுத்தளிப்பின் (Commentator) மூலம் சொல்லி வருகின்றனர்..
இவர்களில், திரு சுருளி ராஜ் அவர்கள், அரசாங்கத்தில், ஊரக வளர்ச்சித் துறையில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். எந்த ஊரிலும் நடைபெறும் சன்மார்க்க நிகழ்ச்சிக்கு, நிகழ்ச்சியினைத் தொகுத்தளிக்க அந்தந்த சன்மார்க்க அன்பர்கள் முன் கூட்டியே இவர்களிடம் விவரம் தெரிவித்து வரும்படிக் கேட்டுக் கொண்டால், இவர்கள், அங்கு சென்று, தனது பணியினைச் செய்து வருகின்றார். போக்கு வரத்துச் செலவுக்கு மட்டும் கட்டணம் செலுத்தி இவர்களைப் பல சன்மார்க்க அன்பர்களும், தமது ஊர்களில் நடைபெறும் சன்மார்க்க நிகழ்ச்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகப் பயன் படுத்திக் கொள்கின்றனர்.
சமீபத்தில் கூட, 6.6.2009 மற்றும் 7.6.2009 ஆகிய தேதிகளில், திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, கீரனூர் என்ற ஊரில் சன்மார்க்கப் பெரியவர் (96 வயது) திரு குலபதி குப்புசாமி அவர்கள் நடத்திய விழாவில் இவர்கள் மூவரும் கலந்து கொண்டு, நல்ல முறையில், சிறப்பாக நிகழ்ச்சித் தொகுப்பினை அமைத்து திரு அருட்பா பாடல்களைப் பாடி, அனைவரது பாராட்டினையும் பெற்றனர். தேவைப் படுபவர்கள், திரு அவர்களைத் தொடர்பு கொண்டு பயன் பெறலாம்.
சுருளி ராஜன் , கம்பம்,- செல் 91 98941 90196.
திரு ஜெயப்பிரகாஷ், B.Sc., B.L., அன்னஞ்சி செல் 91 99651 66225
திரு பொம்மைய சாமி கம்பம். தொலை பேசி. 04554 21999.
ஒருவரிடம் சொல்லி விட்டால், ஏனைய மூவரும் தகவல் பரிமாறிக் கொண்டு, நிகழ்ச்சி நடத்துவதற்கு வருகின்றனர்.
வளர்க இவர்களது சன்மார்க்கத் தொண்டு …
P Sujatha
Karunaimigu RamanujamAvl,
Vanakkam.Thank u information for Kambam Sanmarga Sangathinaar&Thank u for Kambam Sanmarga sangathinaar.
With Vallalar Loving,
ArulJothiSujatha.
Tuesday, June 9, 2009 at 09:43 am by P Sujatha