DAEIOU - தயவு
தேனி மாவட்டம் ஓடைப்பட்டி-சன்மார்க்க கிராமம்.

தேனி மாவட்டம், உத்தம பாளையம் தாலுகா ஓடைப்பட்டி கிராமத்தில் சமரச சன்மார்க்க சங்கம்.
கடந்த 6.6.2009, 7.6.2009 ஆகிய தேதிகளில், பழனி தாலுகா கீரனூர் கிராமத்தில் அமைந்துள்ள வள்ளலார் குரு குலத்தில் விழா நடைபெற்றது. மேற்படி விழாவில், உத்தமபாளையம் தாலுகா ஓடைப்பட்டி கிராமத்திலிருந்து கிட்டத்தட்ட 30 அன்பர்கள் ஆண்களும் பெண்களுமாக வந்து கலந்து கொண்டனர். அ\ந்த கிராமத்தில் மேலப்பட்டியிலும், கீழப்பட்டியிலும், இரு வேறு அமைப்புக்களின் கீழ் சன்மார்க்க சங்கங்கள் இயங்கி வருகின்றன.
மேலப்பட்டி சன்மார்க்க சங்கத்தின் தலைவியின் பெயர் ராமுத்தாய் என்பதாகும். வயது சுமார் 65-க்கு மேல் இருக்கும். அவருடன் திருமதி குள்ளம்மா என்ற சுமார் 80 வயது உள்ள அம்மையார் வந்திருந்தார்.
இருவரும் 6.6.2009 அன்று மாலை சுமார் 5.30 மணி அளவில் விழா மேடையில் ஏறித் திருவருட்பா பாடல்களை இசையுடன் பாடினர். உடன் பாடிய திருமதி குள்ளம்மா, மனப்பாடமாக திரு அருட்பாக்களைப் பாடினார். கிராமங்களில், வயல் காடுகளில், கழை எடுக்கும் போதும், விவசாய வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதும், தமிழகத்தின் பல கிராமங்களில் நாட்டுப் புறப் பாடல்களை இசைத்துக் கொண்டே ஆண்களும், பெண்டிரும் வேலை செய்வதைக் கண்டிருக்கிறோம்.
அந்த வகையில் திருமதி ராமுத்தாய் மற்றும் குள்ளம்மா ஆகிய இருவருமே, தமது பகுதியில் வாழும் மக்களை சன்மார்க்கத்தின் பால் இழுத்து, தம்முடன் சேர்ந்து பாடும்படி..அதன்பின் அவர்களே பாடுகிறாற்போல்..பின்னர் அவர்களையும் வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறிக்குக் கொண்டு வந்துள்ளனர். தங்களது முயற்சியால், கிட்டத்தட்ட 60 நபர்களை, புலால் சாப்பிடுவதை விடுத்து, சைவ நெறிக்குக் கொண்டு வந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
அதே ஊரில் உள்ள மற்றொரு சன்மார்க்க சங்கத்துக்குத் தலைவர் திரு தொந்தி குப்புசாமி ஆகும். 65 வயதினர். தமது சங்க அங்கத்தினர்களுடன் இந்த விழாவில் கலந்து கொண்டு 2 நாட்களும் தங்கி, சன்மார்க்கக் கல்வியினை மேம்படுத்திக் கொண்டு சென்றனர்.
ஒரு சிறிய கிராமத்தில், சுத்த சன்மார்க்கம் அரும்பி, மலர்ந்து தற்போது மணம் கமழ்ந்து கொண்டிருப்பது, அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
P Sujatha
கருணைமிகு ராமனுஜம் அவர்களுக்கு,
தேனீ மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா ஓடை பட்டி கிராமத்தின் சன்மார்க்க சங்க சிறப்பை பற்றி சொன்னதற்கு நன்றி.மேல பட்டி சன்மார்க்க சங்க தலைவி ராமுத்தாய்,திருமதி.குள்ளம்மா ஆகியோருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.
திருவருட்பா பாடல்களை வயல் வேலை செய்து கொண்டு பாடி ஒரு கிராம மக்கள் எல்லாரையும் சைவமாக மாற்றி இருக்கிறீர்கள்.சந்தோசமா இருக்கு.நிறைய சன்மார்க்க சங்க அமைப்புகள் சேர்ந்து செய்ய வேண்டிய பணியை செய்து இருக்கிறீர்கள்.தற்போது செயல் பட்டு வருகின்ற பல சன்மார்க்க அமைப்புகளுக்குள் ஒற்றுமை இல்லாமல் உள்ளது.சன்மார்க்க அமைப்புகளுக்குள் போட்டி தான் நிலவுகிறது.நாங்க அது செய்தோம்,இது செய்தோம் என்கிறார்கள்.எந்த செயல்பாடும் நடந்ததாக இல்லை.தவறாக இருந்தால் மனிக்கவும்.ராமுத்தாய்,குள்ளம்மா,குப்பு சாமி போன்ற நபர்களை போல எல்லா சன்மார்க்க அமைப்பு நபர்களும் இருக்க வேண்டும்.அனைத்து சங்க அமைப்புகளும் ஒன்று இணைந்து செயல் பட வேண்டும்.இது வள்ளலாரின் வேண்டுகோள். வள்ளலார் அன்புடன்,அருள்ஜோதிசுஜாதா.
Tuesday, June 9, 2009 at 06:49 am by P Sujatha