தென் ஆப்பிரிக்காவில் வள்ளலார் நெறி பரப்பிய புலவர் திரு ஆழ்வார்..
பிரிவுச்சார விழாவில் ஏற்புரை.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
குவாசூலு நெட்டால் பண்பாட்டுப் பரப்புநர் கழகம் (KZN) தென்னாப்பிரிக்காவில்
2003ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. நிறுவனர் முன்னாள் வீட்டு வசதி அமைச்சர்,
இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு எஸ். வி. நாயகர் அவர்கள், நேட்டால்
வடபகுதி வாழ் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வருபவர். தூய
தமிழர். இசைக் கலைஞர். திருக் கோவில்கள், ஆன்மீக சங்கங்கள் வாயிலாய்த்
தொண்டாற்றி வருபவர்.
1995 ம் ஆண்டு முதல் தர்பன் (Durban) மாநகரில் சுவாமி பிரம்மாந்தா குடும்பத்தினர்
திருமிகு கண்ணபிரான் படையாட்சி அவர்கள் என்னைப் பயன்படுத்தி வந்ததைக் கண்ட
மாண்புமிகு நாயகர் அவர்கள் 2003 ஆம் ஆண்டு என்னை வட மாநிலம் கிராமப் பகுதிகளில்
பயன்படுத்தினர். STANGER, GLEDHOW, TUGELA, GINGINLOVU, ESHOWE, EMPANGENI, RICHARDSBAY
பகுதி வாழ் மக்கள் பயன் அடைந்தனர். ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு வாரம் தங்கி வகுப்புகள்
நடத்தினேன்.
தமிழ் மொழி, பண்பாடு, தமிழிசை, ஆர்மோனியம், யோகாசனம், மூச்சுப் பயிற்சி, தியானம்
ஆகியவற்றில் சிறார், இளைஞர், பெரியோர் பயிற்சி பெற்றனர்.
ஆண்டு தோறும் தமிழ்த் தேர்வு நிகழ்த்தப்பட்டது. யோகாசன முகாம்கள் நடத்தப்பட்டன்.
தேவார, திருவாசக, தாயுமானவர், திருவருட்பா, பாரதியார் மற்றும் சித்தர் பாடல்கள் இசையொடு
பாடும் திறன் பெற்றனர். சைவ சித்தாந்த வேதாந்த தத்துவங்கள் பாடம் கேட்டுத் தெளிந்தனர்.
இவ்வளவும் இலவச வகுப்புகளே நிகழ்த்தப் பட்டன. ஐந்தாண்டுகளும் 150 பாடல்களுக்கு மேலாய்ப்
பயின்றனர். மக்கள் அனனவரும் தாய்மொழியை மறந்தவர்கள். ஆங்கிலமே கையாள்பவர்.
சாதியை மறந்தவர்கள், சாதியை பெயரளவில் கொண்டுள்ளவர்கள். ஒவ்வொரு ஊரிலும் சில
தன்னலமற்ற அருட் தொண்டர்கள் தம் துணைவியரோடு தொண்டாற்றுகின்றனர். அத் தொண்டர்கள்
வருமாறு
MR. BEN NAICKER, MR. GANS MOOPEN. MR. RANGA PILLAY, MR. HENRY DHAVAR, MR. ROBERT PADAYACHEE, MRS. MOLLY
REDDY, MR. RIKKI NAIR. யானும் இப் பகுதி வாழ் மக்களும் என்றும் இவர்கட்குக் கடமைப் பட்டவர்களாவோம்.
வாழ்க வளர்க குவாசூலு நெட்டார் பண்பாட்டுக் கழகம் (KZN)