தென் ஆப்பிரிக்காவில் இயங்கும் வள்ளலார் சங்கங்கள்.
கடந்த 31.5.2009 அன்று சென்னை T. நகரில், வள்ளலார் பன்னாட்டு சன்மார்க்க சங்கத்தின் கூட்டம், மேற்படி சங்கத் தலைவர் திரு சுப்புராமன் அவர்கள் வீட்டில் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் இருந்தும் அன்பர்கள் கலந்து கொண்டனர். அவர்களில், சென்னையைச் சேர்ந்த அன்பர் புலவர் திரு ஆழ்வாரும் ஒருவர். இவர், தாயுமானவரின் பாடல்களாலும், திரு அருட்பிரகாச வள்ளற் பெருமானின் திரு அருட்பாவின் மூலமும் மிகவும் ஈர்க்கப்பட்டவர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்றுள்ளார். சென்னையில் வசித்த போது, வீதிகள் தோறும் திரு அருட்பாவினை அனைவரும் அறியும் வண்ணம் சென்று பாடியுள்ளார்.
ஒரு கால கட்டத்தில், தென் ஆப்பிரிக்காவில், வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியினைப் பரப்புவதற்கு ஒரு நபர் வேண்டியிருந்த போது, அங்கு வசித்த திரு கே.படையாச்சி அவர்கள், திரு ஆழ்வார் அவர்களை, அப் பணிக்கு எனத் தேர்வு செய்து,, அவரை அங்கு அழைத்து சென்றதன் மூலம் கடந்த பல ஆண்டுகள் அங்கு பணி புரிந்துள்ளார். அங்கு உள்ள ரிச்சர்ட்ஸ் பே (KZN Richards Bay) என்ற இடத்தில் அவர் பணிபுரிந்துள்ளார். தைப் பூச தரிசனத்தை, தென் ஆப்பிரிக்காவில் அதே போன்றதொரு நிகழ்ச்சியினை, இவர் அங்கு செய்து அனைவருக்கும் காண்பித்துள்ளார். அங்குள்ள மக்கள் சன்மார்க்க வழிக்கு வந்து, வடலூர் தைப்பூச தரிசனத்தை இதன் மூலம், தென் ஆப்பிரிக்காவிலேயே கண்டு களித்துள்ளனர். திரு அருட்பாவை தென் ஆப்பிரிக்க மக்கள் இலகுவாக இசையுடன் பாடுவதற்கு திரு ஆழ்வார் அவர்கள் பயிற்சி அளித்துள்ளார்.
அங்கு வசிப்பவர்களுக்கு யோகா, தியானப் பயிற்சி, வள்ளற் பெருமானின் சுத்த சன்மார்க்க ஒழுக்கம், திரு அருட்பாவினை அனைவருக்கும் போதித்தல், ஜீவ காருண்ய ஒழுக்கம் போன்றவற்றை பரப்பியுள்ளார்.
அங்கு கீழ்க்காணும் இடங்களில் வள்ளல் பெருமானின் சுத்த சன்மார்க்க நெறி பரப்பும் சங்கங்கள் உள்ளன என அவர் தெரிவித்தார்.
- திரு அருட்பாக் கழகம், டர்பன், சேட்ஸ்வொர்த்
- சுத்த சன்மார்க்க சங்கம், டர்பன்,
- சுத்த சன்மார்க்க சங்கம், ரிச்சர்ட்ஸ் பே.. (இங்குதான் தற்போது சத்திய ஞான சபை கட்டுமானப் பணி துவங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார். பென் நாயக்கர் என்பவர் மூலம் இந்தக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.)
- KZN கல்சுரல் ப்ரொபொகேஷன் சொஸைட்டி, ரிச்சர்ட்ஸ் பே, டர்பன்.
31.5.2009 அன்று சென்னைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர், தம்மை, தென் ஆப்பிரிக்க சன்மார்க்க சங்கத்தினர் மீண்டும் அழைப்பதாகவும், தாம் அங்கு சென்று விரைவில் பணிபுரிய உள்ளதாகவும் தெரிவித்தார்..
அதன் கட்டுமானப் பணிக்கு உதவிகரமாக இருக்கும் என்ற விதத்தில், ஸ்ரீலங்காவில், ஜாஃப்னா ஏரியாவில் சாவகச்சேரி என்ற இடத்தில், அன்பர் திரு கேத்தீஸ்வரன் கட்டி உள்ள சத்திய ஞானக் கோட்டத்தின் மாதிரி வரைபடம் இந்த இணைய தளத்தில் இருந்தது, வள்ளலார் ஸ்பேஸ் உறுப்பினர் திரு சதீஷ் குமார் அவர்கள் மூலம் கடந்த 1.6.2009 அன்று தென் ஆப்பிரிக்க அன்பர்களுக்கு இ.மெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இணைய தளத்தின் உதவிக்கு வாழ்த்துக்கள்.
புலவர் திரு ஆழ்வாருக்கு வயது சுமார் 68 இருக்கும். இந்த வயதிலும், வள்ளல் பெருமானை உள்ளத்தில் இருத்திக் கொண்டு, தாம் தென் ஆப்பிரிக்காவில் மீண்டும் பணி புரிய உள்ளேன் என்று தெரிவித்த அவரது ஆர்வம் மிகவும் போற்றத் தகுந்ததே. இவரது போதனையினால், பல அன்பர்கள், சுத்த சன்மார்க்கத்தின் மேன்மையினைத் தெரிந்து கொண்டுள்ளனர்.
அவர், அங்கு நலமுடன் பல்லாண்டுக் காலம் வாழ்ந்து, தென் ஆப்பிரிக்காவில் சுத்த சன்மார்க்க நெறியினை நன்கு தழைத்தோங்கச் செய்ய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கருணையினை அனைவரும் வேண்டுவோம்
தென் ஆப்பிரிக்காவில் வள்ளலார் நெறி சன்மார்க்க சங்கங்கள்.
Thank u information about KarunaiMigu Alvaar.
I am very appreciate to Alvaar Ayya.
Karunaimigu Alvaar Ayya,
Keep it up ur sanmarga service Ayya.vallalarin principlesa parava seivatharkaga south africavuku poranga enna arium poothu ropa santhosama iruku.
With Vallalar Loving,
AruljothiSujatha