DAEIOU - தயவு
24.5.2009 திண்டுக்கல் பொன்னகரத்தில் அருட்பெருஞ்ஜோதி தயவு ஆலயம் பூச விழா.

அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம் பூச விழா,
பொன்னகரம், திண்டுக்கல்
மாதாந்திர பூச விழா.
விரோதி ஆண்டு வைகாசித் திங்கள் 10ம் நாள் 24.5..2009 ஞாயிற்றுக் கிழமை
பூச விழா.
திண்டுக்கல் நகரிலே அவதரித்த மகான் தயாநிதி சரவணானந்த சுவாமிகள் ஆவார். வள்ளற் பெருமானாரின் சுத்த சன்மார்க்கக் கொள்கைகளை அடியொற்றி, சுவாமி சரவணானந்தா அவர்கள் 60க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். உபதேசப் பகுதியில் வள்ளல் பெருமான் தம்மை ஏறாத நிலை மேலேற்றி விட்டதுதயவுஎனக் குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில், தயவுப் பாக்கள், தயா விளக்க மாலை, தயவுப் பெரு நெறி, தயவுக் குறள் என்ற பல உரைநடை நூல்களும் பல பாக்களும் யாத்துள்ளார்கள். சுவாமி அவர்களுக்கு, மேட்டுக்குப்பத்திலே, வள்ளற் பெருமானின் காட்சி, அவர்களது இளம் வயதிலேயே கிடைத்துள்ளது.
அவர்கள்தமது 96 வயதில் சித்தி பெற்றார்கள். திண்டுக்கல் நகரில் நத்தம் சாலையில் உள்ள பொன்னகரம் என்ற இடத்தில், “சுவாமி சரவணானந்தா அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லம்கடந்த 2003ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.
மாதந்தோறும் பூச நாளை ஒட்டிய ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று பொன்னகரம் அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் சன்மார்க்க அன்பர்கள் திரளாகக் கலந்து கொண்டு, அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வழிபாடு செய்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
இந்த தயவு இல்லத்தை திண்டுக்கல் தயவுநூல் அறக்கட்டளையினை நடத்தி வரும் அன்பர் திரு எஸ்.ஆர். ராமலிங்கம் மற்றும் அவரது குடும்பத்தினர், அன்பர்களின் உதவியோடு பராமரித்தும், ஏழைகளுக்குப் பசியாற்றுவித்தல் பணியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில், மாதப்பூச நாளினை ஒட்டி, கடந்த 24.5.2009 ந்தேதி ஞாயிற்றுக் கிழமை இந்த தயவு ஆலயத்தில் மாதாந்திரக் கூட்டம் நடைபெற்றது.
காலை 10.30 மணிகொடிவணக்கம்.
காலை10.40மணிதிருவடிப் புகழ்ச்சி, அருட் பெருஞ்ஜோதி அகவல், அட்டகம் மற்றும் சுவாமி சரவணானந்தரின் சற்குரு வணக்கப் பாடல்கள்.
பகல் 12.30 மணி.
உலகில் உள்ள அனைத்து ஆன்மாக்களின் நலன்களுக்காகவும், தயவு தியானம் நடைபெற்றது.
இதனை அடுத்து திண்டுக்கல் சுவாமிகளின் அணுக்கத் தொண்டர் தயவு வே.விசுவநாதன் அவர்கள், வந்திருந்த அனைவரையும் வரவேற்றார். அவர் கூறியதாவது.
இந்த விழாவானது இன்று 142ம் ஆண்டு நிறைவினில் கொண்டாடப்படும் சாலை சகாப்த விழாவாக – சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இயற்கையில் அதற்கான முறையில் மிகப் பொருத்தமாக இங்கே நமது தயவு இல்லத்தின் முன் அக்னி மூலை கொடி மரத்திற்கு அருகில் அடுப்புகள் ஏற்றப்பட்டு இங்கேயே சமைத்து அன்னதானம் பாலிக்கும் வகையில், அன்னதான பணி தொடங்கப்பட்டுள்ளது. இதே போல் இனி வரும் காலங்களி நடைபெற ஏற்பாடு ஆகி உள்ளது என்பதை அறியும்போது எல்லோருக்கும் தயா இன்ப ஆன்ம லாபத்தை வழங்கக் கூடிய முறையில் நன்றாக அமைந்து விட்டது. நாளைக்கு வடலூரிலே வைகாசி 11 தருமச் சாலை விழா நடைபெற இருக்கின்றது. மேலும் இந்த மாதம் 28.5.2009ல் வடலூரில் மாத பூச விழாவும் வருகின்றது. மேலும் இயற்கை உண்மை,இயற்கை விளக்கம், இயற்கை இன்பம் எனும் எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி தயவுக் கடவுளின் மூவியல் விரிக்குத்தக வடலூர், மேட்டுக் குப்பம் சித்தி வளாகத் திருமாளிகை, சத்தியஞான சபை, சத்திய தருமச் சாலை என்ற மூன்று நிலைகளும் ஒரு தயவு ஆக்கப் பெற்று இந்த தென் வடலூராம் பொன்னகர அருட்பெருஞ் ஜோதி தயவு இல்லத்தில் ஒப்புயர்வற்ற ஒன்றே ஆன. வைகாசி பூச விழா ஆக மிகச் சிறப்பான முறையில் நடைபெறுகின்றது. எனவே, இத்தனை சிறப்பு வாய்ந்த இவ் விழாவிற்கு வந்திருக்கும் அனைவரையும் தயவுடன் வரவேற்கின்றேன்” என்றார்.
இதன் பின்னர் தயவுத் திரு S.R.இராமலிங்கம் அவர்களால், சுவாமி சரவணானந்தா அவர்கள் அருளிய பேருபதேசப் பிழிவு வாசிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தயவுத்திரு பொன். சங்கரலிங்கம் அவர்கள், சுவாமிகள் அருளிய அருட்பெருஞ்ஜோதி அகவல் உரை விளக்கத்திலிருந்து, ஒன்பது மற்றும் பத்தாம் வரிகளுக்கான உரை விளக்கத்தினை வாசித்து அனைவருக்கும் விளக்கிக் கூறினார்.
மதியம் 1.45 மணி.
தயவுத் திரு மூக்கன் சுவாமி அவர்கள் புருவ நடு ஒளி பற்றி உரையாற்றினார்.
மதியம் 2.00 மணி
தயவுத்திரு வே. அருணகிரி அவர்கள் நன்றி கூறினார். அடுத்த மாதப் பூச விழா இந்த அருட்பெருஞ்ஜோதி தயவு இல்லத்தில் 28.6.2009 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இதன்பின் அருட்பெருஞ்ஜோதி தயவுப் பிரார்த்தனை திருச்சி தயவுத் திருமதி சுகந்தி அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அடுத்து ஜோதி வழிபாடு மற்றும் விண்ணப்பம் சொல்லப்பட்டது. இக் கூட்டத்தில் சுமார் 120 சன்மார்க்க அன்பர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சின்னாளப்பட்டி தயவுத்திருமதி Dr. மகாலெட்சுமி குடும்பத்தினர் மற்றும் திருச்சி P. பிரகாஷ்-சுகந்தி குடும்பத்தினர் இந் நிகழ்ச்சியில்கலந்துகொண்டோர்க்குஅன்னமளிப்புஉபயம்செய்துஅன்பர்கள்மற்றும்ஏழைஎளியமக்களுக்கும்பசியாற்றுவித்தல்பணியினைநிறைவேற்றினார். அதன்பின்விழாஇனிதேமுடிவடைந்தது.
P Sujatha
கருணைமிகு ராமனுஜம் அவர்களுக்கு,
வணக்கம்.சுவாமி சரவானந்தா அவர்களின் செய்தியை அறிய வைத்தற்கு நன்றி.
பொன்னகர தைபூச விழாவில் நடந்த நிகழ்ச்சிகளை பற்றிய விவரங்களை அளித்தற்கு நன்றி. வள்ளலார் அன்புடன்,
அருள்ஜோதிசுஜாதா.
Wednesday, June 3, 2009 at 10:22 am by P Sujatha