DAEIOU - தயவு
வள்ளலாரின் திரு அருட்பா இசை விழாவா .. பறந்து வந்து பாடினார் மாஸ்டர் சிரன்.

திரு அருட்பா இசை விழாவா ... பறந்து வருவேன் பாடுவதற்கு..

கடந்த 9.5.2009 சனிக்கிழமை மதுரையில் மாரியம்மன் தெப்பக்குளம் அருகே உள்ள ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில், திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்கள் தலைமையில் இசைக் கலைஞர் குழுவினர் வந்து, காலை 9.00 மணி முதல் மாலை 7.30 வரை திரு அருட்பா தெய்வ இசையினை அங்கு வந்து சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் மெய்ம் மறக்கும் வண்ணம் பாடினர்.

அந்த இசைக் குழுவினர்களில், மாஸ்டர் சிரன் என்ற சிறுவனின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இசைக் குழுவினர் அனைவரும் முந்தைய நாளிலேயே மதுரை நகருக்கு வந்து தங்கிவிட்டனர்.

குறிப்பிட்ட பாடகர்களில் மாஸ்டர் சிரன் முதல் நாளில் வரவில்லை. மறுநாள் வருவார் என்று அனைவரும் எண்ணினர்.

9.5.2009 அன்று, குறிப்பிட்ட நேரத்தில் மாஸ்டர் சிரன் மேடையில் ஏறி, திரு அருட்பா பாடல்களை அனைவரும் வியக்கும் வண்ணம் பாடினார். அவரைச் சுற்றிலும் பாடகர்கள் குழுவினர் அமர்ந்து கொண்டனர்.

அப்போது மாஸ்டர் சிரன் சொன்னார். தான் சென்னையில் III Standard பயில்வ்தாகச் சொன்னார். தனக்கு தமிழ் படிக்கத் தெரியாது. ஆனால், தனது குரு திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்கள் மூலம், திரு அருட்பாவினை பாடக் கேட்டு, இங்கு வந்து பாடுகின்றேன் எனத் தெரிவித்தார்.

அவர் தமிழ் படிக்கத் தெரியாதவராயிருந்தும், திரு அருட்பாவினன, அருமையாக பாடியதால், அவருக்கு அரங்கம் அதிர்ந்த கரவொலி கிட்டிற்று. அனைவரும் வெகுவாகப் பாராட்டினர்.

அதற்கும் மேலாக, மதுரை ஏர்போர்ட் அருகே பரம்புப்பட்டியில் சன்மார்க்க சங்கம் நடத்தும் திரு பாலகிருஷ்ணன் ஐயா அவர்கள், சால்வை போட்டு மாஸ்டர் சிரனை கெளரவித்தார்.

ஒரு சிறப்புச் செய்தி என்னவெனில், திரு அருட்பா இசை விழாவில் தானும் பங்கு கொண்டு வள்ளற் பெருமானின் திரு அருட்பா தெய்வ இசையினைப் பாட வேண்டும் என்ற ஆர்வத்தில், தனது தாயாருடன், விமானத்தின் மூலம் மதுரை வந்து, இசை விழாவில் பாடி முடித்து விட்டு, அன்றே விமானம் மூலம் சென்னை சென்றடைந்தாராம்.

வள்ளற் பெருமானின் திரு அருட்பாவில் அவர் கொண்ட பய பக்தியை என்னென்பது ......

2 Comments
P Sujatha
karunaiMigu Ramanujam Avl,
Thank U for Information about Master.Siran Young Brother.
I am Very appreciate to Siran young Brother.
Vallalar must give Bright Future to Siran Thambi.
KarunaiMigu Siran Thambi,
Are U Very Interest to sing a Thiruvarupa Songs? Keep it up
your Sanmarga Knowledge. U R a Little Thiruvarupa Arasan.
Aeroplainla vantha kutti Thambi unaku Sister's Wishings.
Vallalar blessings U and Your Mother.
With Vallalar Loving,
AruljothiSujatha
Friday, May 29, 2009 at 02:24 am by P Sujatha
yohahockey
chirannin vallalar bagthi meiselurkka vaikirathu... iam very happy and proud abt him.
Sunday, May 31, 2009 at 23:29 pm by yohahockey