DAEIOU - தயவு
24.5.09 - பொதிகை T.V.யில் 2008ம் ஆண்டு வடலூர் திரு அருட்பா இசை விழா காட்சிகள்.

24.5.09 - பொதிகை T.V.யில் 2008ம் ஆண்டு வடலூர் திரு அருட்பா இசை விழா காட்சிகள்.
கடந்த 19.5.2009 அன்று, வடலூரில் இருந்து திரு அருட்பா இசை விழாவின் பொதுச் செயலாளர் வாசவி B. ஜோதி, இசை அமைப்பாளரும் திரு அருட்பா பாடகருமான திருபுவனம் ஜி. ஆத்மநாதன், மதுரை வள்ளலார் ஆர்க் பவுண்டேஷன் மேனேஜிங் ட்ரஸ்டி திரு ஏ.ராமானுஜம் ஆகியோர் சென்னை பொதிகை தொலைக்காட்சி அலுவலர்களைச் சந்தித்து, வரவிருக்கும் 24வது திரு அருட்பா இசை விழா நிகச்சிக்கான அழைப்பிதழைக் கொடுத்து, அவ் விழாவில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக் கொண்டனர்.
2008ஆம் ஆண்டு நிகழ்ச்சி இருந்தால் அதனை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்கு முன்னோடியாக பொதிகை தொலைக் காட்சியில் ஒளிபரப்பலாம் என அதற்கான வழிமுறைகளை பொதிகை தொலைக்காட்சி நிறுவன அலுவலர்கள் தெரிவித்தனர். அதன் பிரகாரம் உரிய தொகை செலுத்தி, கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட நிகழ்ச்சிகளை அனுப்பி வைத்தனர்.
இன்று 24.5.2009 (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.31மணியிலிருந்து 12.55 மணி முடிய கடந்த ஆண்டின் திரு அருட்பா இசை நிகழ்ச்சிகளை, பொதிகைத் தொலைக்காட்சி ஒளிபரப்பியது. சன்மார்க்க அன்பர்கள் அனைவரும் கண்டு களித்தனர்.
இதற்கு ஏற்பாடு செய்த வடலூர் திரு அருட்பா இசைச் சங்க நிர்வாகிகளையும், பொதிகைத் தொலைக்காட்சி நிறுவனத்தையும், அவர்கள் பாராட்டினர்.
இது போன்றே, 25.5.2009 முதல் 27.5.2009 முடிய வடலூரில் நடைபெற விருக்கும் 24வது திரு அருட்பா இசை நிகழ்ச்சிகளையும், அனைவரும் கண்டு களிக்கும்படி ஒளிபரப்புவதற்கு ஏற்பாடு செய்யும்படியும் அன்பர்கள் கோருகின்றனர்.