DAEIOU - தயவு
9.5.2009 மதுரையில் திரு அருட்பா இசை விழா.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
சங்கீத் சாகர் கல்சுரம் டிரஸ்ட் (பதிவு) சென்னை
வடலூர் அருட்பா இசைச் சங்கம்
மற்றும்
மதுரை மாவட்ட சமரச சுத்தசன்மார்க்க சங்கங்கள் கூட்டமைப்பு
அருட்ஜோதி வள்ளலார் சுத்த சமரச சன்மார்க்க சங்கம் மற்றும்
வள்ளலார் ஆர்க் பெளண்டேஷன், (VallalarOrg Foundation) மதுரை, சிங்கப்பூர், மலேசியா, யு.எஸ்.ஏ.
இணைந்து வழங்கும்
ஒன்பதாம் ஆண்டு
திரு அருட்பா இசை விழா.
நாள் 9.5.2009 சனிக்கிழமை
(சித்ரா பெளர்ணமி தினம்)
நேரம் – காலை 07.00 முதல் முதல் இரவு 09.00 மணி வரை
இடம் – ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திர்,
3, மாரியம்மன் தெப்பக்குளம்,
மேலவீதி, மதுரை 625 009.
ஒன்பதாம் ஆண்டுசிறப்பு நிகழ்ச்சி.
நிகழ்ச்சி நிரல்
காலை 7.00 மணி அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம்
காலை 9.00 மணி தஞ்சை B.N. நாகராஜன் – அருட்பா இசை
காலை 10.00 மணி பாண்டிச்சேரி A. அன்னபூரணி – அருட்பா இசை
காலை 11.00 மணி – மாஸ்டர் சிரன் – அருட்பா இசை
காலை 11.10 மணி – திருபுவனம் ஜி.ஆத்மநாதன் – அருட்பா இசை
பகல் 12.00 மணி – Dr. B.K. சிவராமன் அவர்கள், சொற்பொழிவு
பொதுச் செயலாளர், பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.
பொருள் : இன்றைய சமுதாயத்தில் வள்ளலாரின் தேவை.
மதியம் 1.00 மணி முதல் 2.00 மணி வரை – இடைவேளை
மதியம் 2.00 மணி –செல்வன் மார்க்க பந்து – அருட்பா இசை
மதியம் 2.30 மணி – செல்வன் சத்திய சீலன் – அருட்பா இசை
மதியம் 3.00 மணி – பாண்டிச்சேரி திரு மணிக்கண்ணன் – அருட்பா இசை
மாலை 4.00 மணி – கவிஞர் பி.கே.குணசேகரன் அவர்கள் சொற்பொழிவு.
சரக உதவித் தலைவர், பதிவுத்துறை, செலம் மற்றும் கோவை மண்டலம்.
பொருள் ; வாழ்வியல் வழிகாட்டி வள்ளலார்.
மாலை 5.00 மணி – தஞ்சி ஞானமணி ராஜப்பிரியர் – அருட்பா இசை.
ஒன்பதாம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
மாலை 6.00 மணி –
வரவேற்புரை : இன்னிசையேந்தல் திருபுவனம் ஜி.ஆத்மநாதன் அவர்கள், நிறுவனர். சங்கீத் சாகர் கல்சுரல் ட்ரஸ்ட் (பதிவு)
தலைமை ; கருணை வள்ளல் – மனித நேய மாண்பாளர்
திரு கூ. குருமூர்த்தி, அவர்கள்.
முன்னிலை – அன்னதானச் செம்மல் – ஆன்மீகச் செல்வர்
திரு பி. இராதாகிருஷ்ணன் அவர்கள்.
குத்துவிளக்கு ஏற்றுதல் –டாக்டர் கலைமாமணி சு. சிவகாமி சுந்தரி அவர்கள்.
ஒன்பதாம் ஆண்டு விழாவைத் துவக்கி வைத்து தமது பொற்கரங்களால் மனுமுறை கண்ட வாசகம் “சி.டி”யை வெளியிடுபவர்
திரு S. சங்கரவடிவேல், I.R.S. (Rtd)
M.Sc. (Ag) M.B.A.,B.L., அவர்கள்.
தமது பொற்கரங்களால் “சி.டி”யைப் பெற்றுக் கொள்பவர்
திரு T.R. ஜவஹர்லால் அவர்கள்,
தலைவர், மதுரை மாவட்ட சமரச சுத்த சன்மார்க்க சங்கங்கள்.
சிறப்புரை
திரு K.S. சுப்புராமன் அவர்கள்,
தலைவர், பன்னாட்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கம்.
வாழ்த்துரை
திரு K.K. சுரேந்திரன் அவர்கள்,
ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திர், மதுரை.
திரு அருள் வரதராசன் அவர்கள்,. தஞ்சாவூர்.
திரு கதிர் பாலசுப்பிரமணியம் அவர்கள், தஞ்சாவூர்.
நன்றியுரை திரு ஏ. இராமானுஜம் அவர்கள்,
VallalarOrg Foundation, Madurai.
நிகழ்ச்சி நெறியாளர்
திரு ‘வைரமாலை’ அந்தோனி சாமி அவர்கள்.
இரவு 7.30 மணி
ஜெய சாத்வீக நாட்டியாலயா குழுவினர் வழங்கும்
‘திருவருட்பா நவரத்தின கீர்த்தனைகள்’
பரத நாட்டியம்
நட்டுவாங்க கலைமணி, நாட்டிய கலா சரஸ்வதி,
திரு பத்மா, பி., ஏ. அவர்களின் மாணவிகள்
மனுமுறை கண்ட வாசகம்
விளக்கவுரை : கூ. குருமூர்த்திஅவர்கள்.
பாடியவர்: திருபுவனம் ஜி. ஆத்மநாதன் அவர்கள்.
மேலே கண்ட விவரப்படி மதுரை தெப்பக்குளம் ஸ்ரீமந் நடன கோபால நாயகி மந்திரில் 9.5.2009 (சனிக்கிழமை அன்று) நடைபெறும் திரு அருட்பா இசை விழாவிற்கு அனைவரும் வந்து கலந்து கொண்டு, அருள் நலம் பெற வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.
மதுரையில் திரு அருட்பா இசை விழா
நிகழ்ச்சி நடைபெறுவது, இதுவே முதல் முறை.
இன்னும் ஓரிரு தினங்களே உள்ளன. எனவே, இச் செய்தியினை இணைய தளத்தில் காணும் அன்பர்கள் தமது நண்பர்கள், உற்றார், உறவினர், தாம் சார்ந்துள்ள சன்மார்க்க சங்கத்தவர்கள் முதலானோருக்கும் இந்த நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்து, அவர்களையும் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
மிகக் குறைந்த விலையில் சிங்கப்பூரில் தயார் செய்யப்பட்ட திரு அருட்பா ஆடியோ சி.டி.கள் மற்றும் சுத்த சன்மார்க்க அருள் நூல்கள், நிகழ்ச்சியின்போது கிடைக்கும். அன்பர்கள் வாங்கிப் பயன் பெற வேண்டுமாய்க் கேட்டுக்க் கொள்கின்றோம்.